27 December 2018

திருப்பாவை – பாசுரம் 12

கனைத்து இளம் கற்றெருமை:

விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்?





கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்

அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.


             நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு

எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி
இரக்கத்துடன் காம்புகள் வழியே பால் சுரக்கும்,

இதனால் வீடு முழுவது சேறாகியிருக்கும் பெருஞ்செல்வனின் வீட்டுத் தங்கையே !

பனித்துளிகள் எங்கள் தலையில் விழ நாங்கள்
உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறோம்.

தென் திசையிலுள்ள லங்காபுரிக்கு அரசனான இராவணனை கொன்றொழித்தவனும், 

மனத்துக்கு இனியனுமான இராமனைப் புகழ் பாடுகிறோம்.

எங்களின் குரலைக் கேட்டும் நீ
 வாய்திறவாமல் தூங்குவதை,
 எல்லா வீட்டினரும் அறிந்து விட்டார்கள். 

இதனால் உனக்கு வரும் மதிப்பை அனைவரும் அறியவேண்டுமென்று கிடக்கிறாயாகில், அங்ஙனும் அறிந்தாயிற்று. 
நீ விரைவாக எழுந்து வருவாயாக!





ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

2 comments: