06 January 2020

திருப்பாவை – பாசுரம் 21

ஏற்ற கலங்கள்

"உலகிற்கு ஒளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக!"









ஏற்றகலங்கள் எதிர்பொங்கிமீதளிப்ப *

மாற்றாதேபால்சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள் *

ஆற்றப்படைத்தான்மகனே! அறிவுறாய் *

ஊற்றமுடையாய்! பெரியாய்! * உலகினில் 

தோற்றமாய்நின்ற சுடரே! துயிலெழாய் *

மாற்றார்உனக்கு வலிதொலைந்துஉன்வாசற்கண் *

ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே *

போற்றியாம்வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய்.








பொருள்: 

கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே!

 கண்ணனே! நீ எழுவாயாக.

வேதங்களால் போற்றப்படும் வலிமையானவனே!

அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே!

உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக!

 உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல,

நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம்.

 எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.









ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. //நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம்.//

    நம் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார் அவர் புகழ்பாடி உய்வோம்.

    ReplyDelete
  2. ஆஹா... இன்றைக்கும் படங்கள் ரொம்பவே அழகாக வந்திருக்கின்றன.

    தொடரட்டும் பாசுர அமுதம். நன்றி.

    ReplyDelete