20 January 2020

நம்பெருமாள் அழகு ...திருஅத்யயன பெருவிழா (வைகுந்த ஏகாதசி)


வாழ்க வளமுடன் 






திருமங்கை ஆழ்வார், தொடங்கிய தமிழ்ப்பெருவிழா  இந்த
திருஅத்யயன  பெருவிழா (வைகுந்த ஏகாதசி)


திருமங்கையாழ்வார் தம்முடைய வாழ்நாளின் பிற்பகுதியில்,திருவரங்கத்தில்,திருவரங்கனுக்கு சிறப்பான பல கைங்கர்யங்களை செய்து கொண்டு எழுந்தருளி இருந்தார்.

ஒரு கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சித்திரத் திரு நாளில் (திருமங்கையாழ்வார் திருநட்சித்திரம்) ,நம்பெருமாள் உபய நாய்ச்சிமார்களுடன் திருமஞ்சனம் கண்டருளிய பிறகு, திருமங்கையாழ்வார் ,

திருநெடுந்தாண்டகம் என்கின்ற பிரபந்தத்தை தேவகானத்தில் பாடி நம்பெருமாளை மகிழ்வித்தார்.

அதன் பிறகு திருவாய்மொழி பாசுரங்களைக் கொண்டு பாடி நம்பெருமாளை உகப்பித்தார்.

இதனால்,பெருமகிழ்ச்சி கொண்ட நம்பெருமாள்,
"ஆழ்வாரே உமக்கு என்ன வேண்டும்" என்று வினவினார்.

அதற்கு திருமங்கையாழ்வார் "மார்கழி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி தொடங்கி கொண்டாடப்படும் வேதத்திற்க்கான ஏற்றமிகு விழாவில், அந்த வேதங்களுடனே நம்மாழ்வார் அருளிச்செய்த,

"திருவாய்மொழியையும்" கேட்டு,

 வடமொழி வேதத்திற்கு நிகரான பெருமையை , நம்மாழ்வார் தமிழில் அருளிச் செய்த, "திருவாய்மொழிக்கும்" தந்தருள
வேணும்" என்று விண்ணப்பித்தார்.

நம்பெருமாளும் பெரிதும் உகந்து,

தேவகானத்தில் பாடிய திருமங்கையாழ்வார் "திருமிடர் நோவும்" என்று,

திருமங்கையாழ்வாரின் தொண்டையிலே,தைலக்காப்பை தடவச் செய்து,

ஸ்வாமி நம்மாழ்வாரை"ஆழ்வார்திருநகரியில்" இருந்து, அழைத்து வருவதற்கான, ஸ்ரீமுகப்பட்டயம், மாலை, பரியட்டம், சந்தனம் ஆகியவற்றை  அனுப்பி கௌரவித்தார்.

(இந்த உற்சவத்துக்காக ,ஆழ்வார் திருநகரியில் இருந்து, திருவரங்கத்திற்கு, ஒவ்வொரு வருடமும், நம்மாழ்வார் எழுந்தருளிக் கொண்டிருந்தார்.

பிற்காலத்தில் ஏற்பட்ட சில இடையூறுகளால் ஆழ்வார் திருநகரியிலிருந்து, ஆழ்வாரால் வர முடியவில்லை.
எனவே ராமாநுஜர், ஸ்ரீரங்கம் பெரிய கோவிலிலேயே நம்மாழ்வார் விக்ரகம் பிரதிஷ்டை செய்தார்.

உடன்  மதுரகவி ஆழ்வார்,மற்றும் திருமங்கை ஆழ்வார் விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த நம்மாழ்வாரே, திருமங்கை ஆழ்வார் ,மற்ற ஆழ்வார்கள், இராமாநுஜர்/ஆசார்யர்களுடன் எழுந்தருளி இந்த உற்சவத்தை நடத்தி வைக்கிறார்.)

திருமங்கை ஆழ்வார் தொடங்கிய போது நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு மட்டுமே, பத்து நாட்கள் உற்சவம் நடந்தது.

பிற்காலத்தில் நாதமுனிகள் மற்ற திவ்யப்பிரபந்தங்களையும் நம்பெருமாள் கேட்டருள வேண்டும் என்று பிரார்த்தித்து,

முதல்/இரண்டாம் ஆயிரங்களை பகல் பத்து நாட்களிலும்,
திருவாய்மொழியை இராப்பத்து நாட்களிலும்,

மூன்றாம் ஆயிரம்-'இயற்பா' க்களை இறுதிநாளன்றும் சேவிக்க ஏற்பாடு செய்தார்.

பின்னர் 'இராமாநுச நூற்றந்தாதி'யும் இயற்பாவுடன் சேவிக்கும் முறை ஏற்பட்டது.

இன்றும் மிக சிறப்பாக நடைபெறும் அவ்விழாவில் நம் பெருமாளின் அழகு ...கூற வார்த்தை இல்லை ..

முக நூலின் வழியாக நாங்கள் சேவித்த நம் பெருமாளின் அழகு இனி...


பகல் பத்து முதல் நாள் 

ஸ்ரீ நம்பெருமாள் நீள் முடி கீரிடம், வைர அபயஹஸ்தம் ,
கர்ண பூசனம் , பவளமாலை, நெல்லிக்காய் மாலை , சூரிய பதக்கம் , அலங்காரத்தில்





பகல் பத்து  இரண்டாம் நாள்

நம்பெருமாள் முத்துசாயக் கொண்டை , இரத்தின அபயஹஸ்தம் , அண்டபேரண்டம்பதக்கம் , ஹம்சம் காதுகாப்பு ,லட்சுமி பதக்கம், முத்துமாலை, காசு மாலை , பவள மாலை அலங்காரத்தில்







 பகல் பத்து மூன்றாம் நாள்

நம்பெருமாள் நீள்முடி கீரிடம் ,  இரத்தின அபய ஹஸ்தம், 
மஹாலட்சுமிபதக்கம்,லட்சுதி காசு மாலை,
நெல்லிக்காய் மாலை அலங்காரத்தில்!!!







பகல் பத்து நான்காம்  நாள் 


முன் சேவை: சௌரி சாயக்கொண்டை ,பெரிய கலிங்கத்துராய்
பெரிய பிராட்டி பதக்கம் ,அண்ட பேரண்ட பக்ஷ்சி பதக்கம்
பவழ மாலை,நெல்லிக்காய் ஹாரம்
முத்துச்சரம் ,பஞ்சாயுத மாலை

பின் சேவை : புஜ கீர்த்தி








திருமாலை 


872

காவலில்புலனைவைத்துக் கலிதன்னைக்கடக்கப்பாய்ந்து * 
நாவலிட்டுஉழிதருகின்றோம் நமன்தமர்தலைகள்மீதே * 
மூவுலகுண்டுமிழ்ந்தமுதல்வ! நின்நாமம் கற்ற * 
ஆவலிப்புடைமைகண்டாய் அரங்கமாநகருளானே! (2)
- 1


873

பச்சைமாமலைபோல்மேனி பவளவாய்கமலச்செங்கண் 
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம்கொழுந்தே! என்னும் * 
இச்சுவைதவிரயான்போய் இந்திரலோகம் ஆளும் * 
அச்சுவைபெறினும்வேண்டேன் அரங்கமாநகருளானே! (2)

- 2


874

வேதநூல்பிராயம்நூறு மனிசர்தாம்புகுவரேலும் * 
பாதியும்உறங்கிப்போகும் நின்றதில்பதினையாண்டு * 
பேதைபாலகனதாகும் பிணிபசிமூப்புத்துன்பம் * 
ஆதலால்பிறவிவேண்டேன் அரங்கமாநகருளானே! 

 3


தொடரும்...

முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...


அன்புடன் 
அனுபிரேம் 

2 comments:

  1. பகல் பத்து திருவிழா மிக அருமை.
    படங்கள் கண்ணை நிறைக்கிறது.

    ReplyDelete
  2. சிறப்பான விழா - படங்கள் அசத்தல்....

    ReplyDelete