22 January 2020

குடகு மலை காற்றில்


வாழ்க வளமுடன் ..

எங்களின் அடுத்த பயணம் குடகுமலை நோக்கி ...



மிக அமைதியான ,எளிய, இனிய   இரு நாள் பயணம் நண்பர்களுடன்  ....எதிர்பாராமல் அமைத்த இனிய சுற்றுலா பல புதிய அனுபவங்களுடன் ...

இந்த பயணத்தில் ரசித்த இடங்கள்  படங்களாகவும் , காணொளிகளாகவும்  இனி வரும் பதிவுகளில் ....





கூர்க் என்று அழைக்கப்படும் குடகு (கொடகு) மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது.  இந்தச் சுற்றுலாத்தலம் “இந்தியாவின் ஸ்காட்லாந்து” என்றும் அழைக்கப்படுகிறது.





கொடவா என்னும் பழங்குடியினரின் வாழ்விடமாக விளங்கிய இப்பகுதி பழங்குடியினரின் மொழியில் “குரோத தேசா” என்ற சொல் மூலம் குடகு என்று பெயர் பெற்றிருக்கலாம் என்பது ஒரு சிலரின் கருத்தாகும்.

கொட்+அவ்வா= கொடவா இதன் விளக்கம் கொட் என்றால் கொடு என்றும் அவ்வா என்றால் அம்மா என்றும் பொருள்.

கொடவா என்ற சொல் காவிரி அன்னையை அழைக்கப் பயன்பட்டது என்பது மற்ற சிலரின் கருத்தாகும்.

ஆங்கிலேயர்கள் குடகு என்பதற்குப் பதில் “கூர்க்” என்றழைத்தனர்.









தொடரும் .....

அன்புடன்
அனுபிரேம்




16 comments:

  1. அருமை...

    துல்லியமான படங்கள்...

    ReplyDelete
  2. இலையில் சுற்றி இருப்பது உப்புமாவா? அல்லது புட்டா? இலை கொழுகட்டையா?
    அதைப் பற்றி குறிப்பிடவில்லையே!

    குடகு மலை படங்கள் அருமை. கூர்க்கில் காப்பித்தூள் நன்றாக் ஐருக்கும் என்பார்கள்.

    பார்க்கும் போதே இனிமையான பயணம் என்று தெரிகிறது. யானை, முதலை, படகு எல்லாம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. அது இட்லி மா...இலையில் சுற்றி வேக வைத்து தருகிறார்கள் ..இதற்கு கடுகு ன்னு பெயர் சொன்னார்கள்...

      ஆமாம் மா காபி தூள் வாங்கி வந்தோம்...

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மா

      Delete
  3. கூர்க் சென்றிருக்கிறேன். படங்கள் நன்று. தொடருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அக்கா...

      தங்களின் இனிய கருத்துக்கு நன்றி

      Delete
  4. படங்கள் அருமை. முதலைப் படம் பார்க்க பயமா இருக்கு. தகவல்கள் (விளக்கங்கள்) அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்...

      விளக்கங்கள் போடலாமா என்னும் குழப்பதில்லையே பதிவிட்டேன்...தங்களின் கருத்தால் இனி வரும் பதிவுக்களிலும் பகிர்கிறேன்

      Delete
  5. படங்கள் ஒருபுறம் அழகு..
    இருந்தாலும் பதார்த்தத்தின் பெயர் சொல்லப்படவில்லையே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை அண்ணா...

      அது இட்டிலி தான் ..ஆனால் இலையில் வைத்து வேக வைக்கிறார்கள்

      Delete
  6. வணக்கம் சகோதரி

    அருமையான இடம். இயற்கை வனப்புகள் கண்களை கவர்கிறது. நீங்கள் எடுத்துள்ள புகைப்படங்களின் அழகும், அதை ஊர்ஜிதபடுத்துகிறது. இனி வரும் சுற்றுலா பகுதிகளின் அழகோடு நானும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. மிக அருமையான இடம் குடகு.
    அதன் இயற்கை வண்ணங்களை அப்படியே கொடுத்திருக்கிறீர்கள் அனு.
    கொடவா / அழகான பெயர் விளக்கம்
    அனைத்துபடங்களும், முக்கியமாக முதலை கண்முன் நிற்கிறது.
    இயற்கைவளம் வாழ்க நன்றி மா.

    ReplyDelete
  8. தங்களுக்கும் பிடித்ததில் மிக மகிழ்ச்சி கமலா அக்கா...


    இனி வரும் பதிவுகளும் உங்களுக்கு நிச்சியம் பிடிக்கும்...உங்களின் இனிய கருத்துரைக்கு நன்றி அக்கா

    ReplyDelete
  9. அழகான இடமாக இருக்கு. முதலைகளை பார்க்கதான் பயமா இருக்கு. பெயர்காரணம் ,தகவல்கள் அருமை.

    ReplyDelete
  10. அழகிய படங்கள். பயணிக்கிறோம்.

    ReplyDelete
  11. அடுத்த பயணம் - ஆஹா மகிழ்ச்சி. பயணம் நல்லது.

    அழகிய படங்கள்.

    ReplyDelete