வாழ்க வளமுடன் ..
படம்: செந்தமிழ் பாட்டு
இசை: இளையராஜா, MS விஸ்வநாதன்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
சின்ன சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன,
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன...
உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா...
"ஹாஹாஹாஹ....அது தீண்டும் மேகம் இல்ல, தேகம்
சிலிர்க்குதம்மா"
உனது தூறலும் இனிய சாரலும்
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா...
நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துடிக்குதம்மா...
மனித ஜாதியின் பசியும் தாகமும்
உன்னால் என்றும் தீருமம்மா
வாரித் தந்த வள்ளல் என்று
பாரில் உன்னை சொல்வதுண்டு
இனமும் குலமும் இருக்கும் உலகில்
அனைவரும் இங்கு சரி சமமென உணர்த்திடும் மழையே...
சின்ன சின்ன...
பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை...
"படிச்சவன் பாட்ட கெடுத்தான் கதைய இல்ல இருக்கு!
பிழைக்கு-ன்னு எழுதலியே...
மழைக்கு-ன்னு தானே எழுதி இருக்கேன்?
"ஓஹோ...."
மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்
நீயோ இங்கே வருவதில்லை...
வெடித்த பூமியும் வானம் பார்க்கையில்
நீயோ கண்ணில் தெரிவதில்லை...
உனது சேதியை பொழியும் தேதியை
முன்னால் இங்கே யாரறிவார்...
நஞ்சை மன்னும் பூஞ்சை மன்னும்
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்
உனது பெருமை உலகம் அறியும்
இடி என்னும் இசை முழங்கிட வரும்
மழை என்னும் மகளே...
சின்ன சின்ன தூறல் என்ன
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன
சிந்தச் சிந்த ஆவல் பின்ன,
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன...
காணொளில சின்னச் சின்ன தூரல் மாதிரி இல்லையே... நல்ல மழைனா பெய்யுது..
ReplyDeleteமழைத் துளிகளின் அழகே அழகு...
ReplyDeleteபதிவுடன் இனிய பாடலைப் பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி..
படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. காணொளியும் நன்றாக இருக்கிறது. மழை என்றைக்குமே பிடித்தமானது தானே. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteபாடலுக்கு நீங்கள் எடுத்த புகைப்படங்கள் / காணொளி அருமை.
ReplyDeleteமுதல் படம் அருமை...&அழகு
ReplyDelete