ஏழாம் நாள் காலையில் அழகர் மோகனாவதார சேவையருளி, ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க சேவையுடன் புறப்பட்டு செல்வார் .பின் மைசூர் மண்டபத்தில் கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்பப் பல்லக்கு சேவை நடக்கும் .
மோகனாவதாரம் |
புஷ்ப பல்லக்கு சேவை
திருக்கோவிலில் நடைபெற்ற இந்த வருட விழா காட்சிகள் ...
எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார்.
பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடைபெறும்.
அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவு பெறுகின்றன.
தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவின் காட்சிகளையும் , ஏழு நாட்கள் அழகர் திருவிழா காட்சிகளையும் கண்டும், படித்தும் ரசித்தோம் ....
இத்திருவிழாவின் செய்திகளை கண்ட பொழுது மேலும் அறிந்துக் கொள்ளும் ஆர்வம் வந்தது ... அதற்காக பல இடங்களில் தேடியே இந்த தகவல்களையும் படங்களையும் சேகரித்தேன்...
அதை ஒரு சேமிப்பாகவும் ,அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கும் பகிர்ந்தேன் ....கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்து இருக்கும் என நம்புகிறேன் ....
தொடர்ந்து வாசித்து கருத்துக்கள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள் பல ....
திருவிழாவின் படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
அன்புடன்
அனுபிரேம்
திருவாய்மொழி - மூன்றாம் பத்து
இரண்டாம் திருவாய்மொழி – முந்நீர்ஞாலம்
2908
முந்நீர்ஞாலம்படைத்த எம்முகில்வண்ணனே! *
அந்நாள்நீதந்த ஆக்கையின்வழிஉழல்வேன் *
வெந்நாள்நோய்வீய வினைகளைவேரறப்பாய்ந்து *
எந்நாள்யான் உன்னை இனிவந்துகூடுவனே? (2)
2909
வன்மாவையமளந்த எம்வாமனா! *நின்
பன்மாமாயப் பல்பிறவியில்படிகின்றயான் *
தொன்மாவல்வினைத் தொடர்களை முதலரிந்து *
நின்மாதாள்சேர்ந்து நிற்பது எஞ்ஞான்றுகொலோ?
2910
கொல்லாமாக்கோல் கொலைசெய்து, பாரதப்போர் *
எல்லாச்சேனையும் இருநிலத்து அவித்தஎந்தாய்! *
பொல்லாவாக்கையின் புணர்வினையறுக்கலறா *
சொல்லாய்யான் உன்னைச் சார்வதோர்சூழ்ச்சியே.
அன்புடன்
அனுபிரேம்
கள்ளழகர் விழாக்கோலப் படங்களை மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteதொடர்ந்து பகிர்வதற்கு பாராட்டுகள்
அழகான படங்களுடன் சிறப்பான பதிவு. தொடரட்டும் திருவிழா.
ReplyDeleteஅழகரை நேரில் சென்று தரிசித்த மகிழ்வு.
ReplyDelete