26 July 2020

ஸ்ரீ கோதை ரெங்கமன்னார் சயன திருக்கோலம் - 2020

வாழ்க வளமுடன் 


6 ஆம் திருநாள் காலை ஸ்ரீஆண்டாள் தங்கப் பல்லக்கு, ஸ்ரீரெங்கமன்னார் தந்தப் பல்லக்கு சேவையில்  
இரவு ஸ்ரீஆண்டாள் - கனகதண்டியல், மூக்குத்தி சேவை ...
ஸ்ரீரெங்கமன்னார் - யானை வாகனம்
மூக்குத்தி சேவை 6ம் திருநாள் 


ஸ்ரீரெங்கமன்னார் - யானை வாகனம்

இந்த வருட சேவை 6 ஆம் திருநாள்

7 ஆம் திருநாள் - காலை ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் இரட்டைத் தோளுக்கினியானில் சேவை ,இரவு ஸ்ரீஆண்டாள் திருமடியில் ஸ்ரீரெங்கமன்னார் -  சயனத் திருக்கோலம்


ஏழாம் நாள் ஆண்டாள்-ரங்கமன்னார் இரட்டை தோளுக்கினியான் அலங்காரத்தில் வீதி விடையாத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிவர். இரவு ஆண்டாள்-ரங்கமன்னார் சேர்ந்து கண்ணாடி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வருவர். இரவு 8 முதல் 11 மணி வரை கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக்கோலத்தில் காட்சியளிப்பார். 


இந்த வருடம் சயனத் திருக்கோல  காட்சிகள் (323)
சித்திரகூ டத்துஇருப்பச் சிறுகாக்கை முலைதீண்ட

அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி

வித்தகனே இராமாவோ நின்னபயம் என்றுஅழைப்ப

அத்திரமே அதன்கண்ணை அறுத்ததும்ஓ ரடையாளம்.

வனவாசத்தின் போது சித்திரகூட மலையில் சீதாப்பிராட்டியின் மடியில் ஸ்ரீராமபிரான் தலைவைத்து சயனித்திருக்கும் போது, 

இந்திரன் மகனான ஜயந்தன் பிராட்டியினழகைக் கண்டு மயங்கி அவளைத் தான் ஸ்பார்சிக்க வேண்டுமென்னுந் தீயகருத்தினனாய்த் தேவவேஷத்தை மறைத்துக் காகவேஷத்தைப் பூண்டு கொண்டு வந்து,  

பிராட்டியைத் துன்புறுத்த, பெருமாள் விழித்து காகம் மேல் கோபம் கொண்டு அஸ்திரத்தை வீச, அந்த அஸ்திரத்திலிருந்து தப்பிக்க மூன்று உலகங்களுக்கும் ஓடிப்பார்த்து முடியாமல் பிராட்டியின் திருவடியிலேயே வந்து விழுந்தது.

பிராட்டியும் காகம் மேல் இரக்கம் கொண்டு அதற்கு உயிர்ப்பிச்சை அளிக்க பெருமாளிடம் வேண்ட, பிராட்டியின் சிபாரிசுக்காக காகத்தைக் கொல்லாமல் அதன் ஒரு கண்ணை மட்டும் அறுத்து உயிர்ப்பிச்சை அளித்தார்.

இந்தப் பாசுர நிகழ்வை விளக்கும் வகையில் இன்றைய சயன சேவை.வேறெங்கும் காணமுடியாத தரிசனம்.

நாச்சியார் திருமொழி
ஏழாம் திருமொழி - கருப்பூரம் நாறுமோ
பாஞ்சஜன்னியத்தைப் பத்பநாபனோடுஞ் சுற்றமாக்குதல்

போய்த்தீர்த்தமாடாதே நின்றபுணர்மருதம் * 
சாய்த்தீர்த்தான்கைத்தலத்தே ஏறிக்குடிகொண்டு * 
சேய்த்தீர்த்தமாய்நின்ற செங்கண்மால்தன்னுடய * 
வாய்த்தீர்த்தம்பாய்ந்தாடவல்லாய் வலம்புரியே!

6 572செங்கமலநாண்மலர்மேல் தேனுகரும் அன்னம்போல்  * 
செங்கண்கருமேனி வாசுதேவனுடய * 
அங்கைத்தலமேறி அன்னவசஞ்செய்யும் * 
சங்கரையா! உன்செல்வம் சாலஅழகியதே.

7 573


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......


திருவிழாவின் படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்

4 comments:

 1. இனிய தரிசனம்...
  படங்கள் அத்தனையும் அழகு..
  ஸ்ரீ ஆண்டாள் சமேத ரங்கமன்னார்
  திருவடிகள் போற்றி..

  ReplyDelete
 2. ஆண்டாளின் பாசுரங்கள் ஒரு சில தவிர மற்றவை எளிமையாகப் புரியக்கூடியவை அல்ல. அவ்வளவு திறமை அவரிடம் இருந்தது. ஒரு வரியிலேயே பெரிய நிகழ்ச்சியை எழுதுவது. இதில் வாரணமாயிரம் போன்றவை விதிவிலக்கு.

  இன்றைய 'நெரிந்த கருங்குழல் மடவாய்' பாசுரத்தையும் (சித்திரகூடத்து இருப்ப சிறுகாக்கை முலை தீண்ட) ரசித்தேன்.

  படங்கள் அருமை. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது ஆண்டாளின் வரலாற்றையும் எழுத முயலுங்கள்.

  ReplyDelete
 3. படங்கள் எலலமே நல்லாருக்கு அனு.

  நேற்றும் ஆண்டாளைப் பார்த்துவிட்டேன்

  கீதா

  ReplyDelete
 4. படங்கள் எல்லாம் மிக அழகு.
  திருவிழா தரிசனம் பெற்றேன்.

  ReplyDelete