இந்த ஆண்டு ஆண்டாள் திருவாடிப்பூர உற்சவம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருக்கோவிலுக்கு உள்ளேயே நடைபெறுகிறது ....
அக்காட்சிகளுடன் முந்தைய வருட வைபவங்களுக்களையும் இனி வரும் பதிவுகளில் காணலாம் ....
1 ஆம் திருநாள் - கொடியேற்றம்
காலை ஸ்ரீஆண்டாள் - தங்கப்பல்லக்கிலும்
ஸ்ரீரெங்கமன்னார் - தந்தப் பல்லக்கிலும் புறப்பாடு கண்டருள்வார்கள்.
இரவு ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சேர்த்தியில் பதினாறு வண்டி சப்பரம்.
இந்த வருடம் முதல் திருநாள்
2 ஆம் திருநாள் - காலை
ஸ்ரீஆண்டாள் தங்கப்பல்லக்கு, ஸ்ரீரெங்கமன்னார் - தந்தப் பல்லக்கு சேவை
இரவு ஸ்ரீஆண்டாள் சந்திர பிரபை வாகனத்தில் சேவை ,
ஸ்ரீரெங்கமன்னார் சிம்ம வாகனத்தில் சேவை
இந்த வருடம் இரண்டாம் திருநாள்
நாச்சியார் திருமொழி
ஐந்தாம் திருமொழி - மன்னு பெரும்புகழ்
எம்பெருமானைக் கூவியழைக்கும்படி குயிலுக்கு கூறுதல்
மன்னுபெரும்புகழ்மாதவன்
மாமணிவண்ணன் மணிமுடிமைந்தன்
தன்னை * உகந்ததுகாரணமாக
என்சங்கிழக்கும்வழக்குண்டே? *
புன்னைகுருக்கத்திஞாழல்செருந்திப்
பொதும்பினில்வாழும்குயிலே! *
பன்னிஎப்போதும் இருந்துவிரைந்து என்
பவளவாயன்வரக்கூவாய். (2)
1 545
வெள்ளைவிளிசங்கு இடங்கையில்கொண்ட
விமலன் எனக்குஉருக்காட்டான் *
உள்ளம்புகுந்து என்னைநைவித்து
நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக்காணும் *
கள்ளவிழ்செண்பகப்பூமலர்கோதிக்
களித்திசைபாடும்குயிலே! *
மெள்ளவிருந்துமிழற்றிமிழற்றாது என்
வேங்கடவன்வரக்கூவாய்.
2 546
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......
திருவிழாவின் படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...
இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்
இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்
திருவாடிப் பூரத்துச் செகத்து உதித்தாளின் படங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.
ReplyDeleteசென்றவருடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தரிசனம் கிடைத்தது.
திருவிழாவின் படங்கள் அழகு. பகிர்ந்ததற்கு நன்றி
சூடிக் கொடுத்த் சுடர்க்கொடியாள் போற்றி..
ReplyDeleteரங்கமன்னார் திருவடிகள் போற்றி..
திருவாடிப் பூரம் - படங்கள் அனைத்தும் வெகு அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete