25 July 2020

ஆடிப்பூரம் ஐந்தாம் திருநாள் - ஐந்து பெருமாள் கருட சேவை


வாழ்க வளமுடன் 








ஐந்தாம் திருநாளில் 

ஸ்ரீ ரெங்க மன்னார்,
ஸ்ரீ பெரிய பெருமாள், 
ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள், 
ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள்,
ஸ்ரீ திருத்தங்கால் அப்பன் எழுந்தருள பெரியாழ்வார் எதிர் சேவை நடைபெறும்.




ஸ்ரீ ரெங்க மன்னார்


ஸ்ரீ பெரிய பெருமாள்


ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள்


ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள்


ஸ்ரீ திருத்தங்கால் அப்பன் 


பெரியாழ்வார்




இரவு ஐந்து பெருமாள் கருட சேவை!!

ஆண்டாளும், பெரியாழ்வாரும் ஹம்ச வாகன சேவை.....


பெரியாழ்வார்




ஆழ்வார்கள், திவ்யதேசத்து எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்ய அந்தந்த திவ்ய தேசத்துக்குச் சென்றனர்....

ஆனால் நம்மாழ்வார் எங்கும் செல்லாமல் ஆழ்வார் திருநகரி புளியமரத்தடியிலேயே இருந்தார். 36 திவ்ய தேசப் பெருமாள்கள் அங்கேயே சென்று மங்களாசாசனம் பெற்றுக் கொண்டனர்.

அதே போல் இன்று ஐந்து திவ்ய தேச எம்பிரான்களும் மிகுந்த ஆர்வத்துடன் பெரியாழ்வார் இருப்பிடம் வந்து மங்களாசாசனம் பெற்றுக் கொண்டனர்.





ஸ்ரீ பெரிய பெருமாள்



ஸ்ரீ ரெங்க மன்னார்



ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள்



ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள்




ஸ்ரீ திருத்தங்கால் அப்பன்

இந்த ஐந்து கருட சேவையில் பெரிய பெருமாள் வடபத்ர சாயி, 
ரங்க மன்னார், 
காட்டழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள், 
திருவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள், மற்றும் அருகில் உள்ள திவ்ய தேசமான திருத்தண்கால் அப்பன் ஆகியோர்  சேவை சாதிப்பர் ..

ஸ்ரீ ஆண்டாள் 


மேலும் இன்று கருட பஞ்சமி.....

கருடன் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் வாகனம். 
திருமாலின் வாயிற்காப்பாளன். 
பெருமாளுக்கு எத்தனையோ வாகனங்கள் இருந்தாலும் கருடன் மீது வரும் சேவை மிகவும் விசேஷம். ‘ஆழ்வார்‘ என்ற சிறப்பு பெயர் கருடனுக்கு உண்டு. 

பெருமாளின் தலைக்கு மேலே கருடன் கொடியாகவும், பெருமாளின் காலிற்கு கீழே வாகனமாகவும் காட்சி தருகிறார். 

விஹாகேஸ்வரன் வைநதேயின், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி என பல பெயர்கள் கருடனுக்கு உண்டு.

ஆடிமாதம் வளர்பிறையில் வரும் பஞ்சமி திதி கருட பஞ்சமி .
 
தட்சணின் மகளான விநதைக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவர் கருடன். அதனால் அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு. 

ஆடிமாதம் சுக்ல பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் கருட அவதாரம்-கருட பஞ்சமி.




நாச்சியார் திருமொழி
ஏழாம் திருமொழி - கருப்பூரம் நாறுமோ
பாஞ்சஜன்னியத்தைப் பத்பநாபனோடுஞ் சுற்றமாக்குதல்


சந்திரமண்டலம்போல் தாமோதரன்கையில் * 
அந்தரமொன்றின்றி ஏறிஅவன்செவியில் * 
மந்திரங்கொள்வாயேபோலும் வலம்புரியே * 
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கேலானே.

4 570


உன்னோடுஉடனே ஒருகடலில்வாழ்வாரை * 
இன்னார் இனையாரென்று எண்ணுவாரில்லைகாண் * 
மன்னாகிநின்ற மதுசூதன்வாயமுதம் * 
பன்னாளும்உண்கின்றாய் பாஞ்சசன்னியமே!

5 571




இந்த வருடம் திருக்கோவிலுக்கு உள்ளேயே  கருட சேவை நடைப்பெற்றது ...
இன்று பகிர்ந்த படங்கள் அனைத்தும் இந்த வருட திருவிழா படங்களே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......
தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. திருவிழா காட்சிகள் சிறப்பு. தொடரட்டும் பக்திப் பதிவுகள்.

    ReplyDelete
  2. ஸ்ரீ வில்லிபுத்தூர் திருவிழா நிகழ்வுகளும்
    கருட பஞ்சமி தரிசனமும் அருமை.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  3. கருட சேவை தரிசனம் மிகவும் அருமை.

    கருட தரிசனம் செய்து கொண்டேன்.

    ReplyDelete