07 July 2020

ஐந்தாம் நாள் - அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்


ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். 


ஸ்ரீஅழகர் ஆற்றுக்குச் செல்லும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளுகிறார்.

தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. 

அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.

 காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. 

அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது. 





  














ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள்.
















திருக்கோவிலில் நடைபெற்ற  இந்த வருட விழா காட்சிகள் ...
















அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர்.





திருவாய்மொழி
மூன்றாம் பத்து
ஒன்றாம் திருவாய்மொழி – முடிச்சோதி
திருமாலிருஞ்சோலை அழகரது எழிலை அநுபவித்தல்


2903

வாழ்த்துவார்பலராக நின்னுள்ளேநான்முகனை * 
மூழ்த்தநீருலகெல்லாம் படையென்றுமுதல்படைத்தாய்! * 
கேழ்த்தசீர் அரன்முதலாக் கிளர்தெய்வமாய்க்கிளர்ந்து * 
சூழ்த்தமரர்துதித்தால் உன் தொல்புகழ்மாசூணாதே?


2904

மாசூணாச்சுடருடம்பாய் மலராதுகுவியாது * 
மாசூணாஞானமாய் முழுதுமாய்முழுதியன்றாய்! * 
மாசூணாவான்கோலத்து அமரர்கோன்வழிபட்டால் * 
மாசூணாஉனபாத மலர்ச்சோதிமழுங்காதே.


அழகர்   திருவிழாவின்  படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. ஆஹா... சிறப்பான தகவல்கள். படங்கள் வழமை போல வெகு அழகு.

    ReplyDelete
  2. அருமை...

    துல்லியமான படங்கள்...

    ReplyDelete
  3. வழக்கமான கோலாகலத்துடன் இந்த வருடம் இல்லாத குறையை இந்தப் பதிவு நிறைவு செய்கிறது படங்கள் எப்பவும் போல சூப்பர்

    ReplyDelete