12 July 2020

காணொளிகள் காணலாம் ....

வணக்கம் நண்பர்களே ....


 பல வருடங்களாக நாங்கள் எடுத்த சின்ன சின்ன வீடியோக்களை அவ்வப்பொழுது youtubeல் பகிர்ந்து வந்தேன்....
சரி ...அப்படி எத்தனை வீடியோக்கள் என்று பார்க்க, விளையாட்டாக பதிவேற்ற  ஆரம்பித்தது இன்று நூற்றுக்கும் மேலே பல வீடியோக்கள் உள்ளன .... எல்லாம் மிக சிறியவையே ஆனாலும் இந்த எண்ணிக்கை எனக்கு ஆச்சரியமே ...

முதன் முதல்  பதிவேற்றிய காணொளி அப்பா எடுத்த மணவாள  மாமுனிகள் சுவாமிகளின் காணொளி  ...






 அதே போல பயணங்களில் எடுத்த காட்சிகளையும்  பகிர்ந்து இருக்கிறேன்  ..




சரி  இன்னும் கொஞ்சம் சிறப்பாக அங்கு வீடியோக்களை பதிவேற்றலாம் என்னும் எண்ணம் வந்தது ....

இன்று இருக்கும் மனநிலையில், மனதிற்கு வித்தியாசமாக வேலை தரும் விதமாக .... 



நாம் அதிகம் செய்யும் சமையலின் வீடியோக்களும் பதிவேற்றலாம் என எண்ணி ஒரு  முயற்சியாக எனது  காணொளிகளையும்  பதிவேற்றுகிறேன்  .... 


youtube  என்பது கடல் போல நிறைய நிறைய சமையல் வீடியோக்கள் கொட்டி கிடைக்கின்றன , அதில் நாமும் ஏன்  என்ற  எண்ணத்திலையை  இது வரை ஏதும் முயற்சிக்கவில்லை ... இப்பொழுது வழக்கம் போல புதிதாக கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில்  பதிவேற்ற   ஆரம்பித்து இருக்கிறேன் ...







சமையல் வீடியோக்கள் மட்டும் இல்லாமல் சின்ன சின்ன கைவினைகள் பொருட்கள் , பாரதியாரின் வரிகள் எனவும் பதிவிட ஆசை ...




இப்பொழுது எடுக்கும் இந்த முயற்சியில் பல தடுமாற்றங்கள் உள்ளன , ஆனாலும் சிறிது சிறிதாக கற்று சிறப்பாக செய்யும் ஆசை உள்ளது ...



அதற்கு வழக்கம் போல உங்கள் அனைவரின் கருத்துக்களும் , ஆதரவும் வேண்டும் ...



அன்புடன்
அனுபிரேம்




4 comments:

  1. உங்களின் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு

    ReplyDelete
  2. நல்லா முயலுங்க. மெது மெதுவா எல்லாமே சிறப்பாக அமைய ஆரம்பித்துவிடும்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. முயற்சி திருவினையாக்கும்.

    ReplyDelete
  4. முயற்சி தொடரட்டும். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete