06 July 2020

முதலைகள் ...

வாழ்க வளமுடன் ....




முந்தைய பதிவுகள் ...

1.குடகு  மலை காற்றில் 
2. கும்பஜ்...
3.திப்புவின் கோடை கால மாளிகை...
4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்
5.தங்கக்கோயில் -பைலகுப்பே
6.காவேரி  நிசர்காதமா
7. ஒரு அழகிய தீவு .... நிசர்காதமா
8.செல்லும் வழியில்
9.தலைக்காவேரியிலிருந்து ...
10.பிரம்மகிரி மலைத் தொடர் ...
11.பாகமண்டலேஸ்வரா கோவில்


போன பதிவில் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலத்தின் படகு பயணத்தில் என்ன பார்த்தோம் என கேட்டேன்.. நீங்கள் நினைத்தது சரி தான்  ...  முதலைகள் ...

இங்கு செல்லும் எண்ணம் இல்லாததால் நாங்கள் ஏதும் தகவல்கள் அறியாமலையே  தான்  சென்றோம் , அதனால் அங்கு முதலைகள்  உள்ளது எங்களுக்கும் தெரியாது ...

முதலில் தூரமாக காணும் போது  ஏதோ  பொம்மைகள் போல இருந்தது ... அதுவும் ஆடாமல் அசையாமல் இருந்தது ...

மகிழ்ச்சியாக நாங்கள்  பேசிக் கொண்டே சென்ற போது  கொஞ்சம் அருகில் செல்ல செல்ல தான்  அதில் ஒன்று வாயை திறந்தது ....அட  எல்லாமே நிஜ முதலைகள் ன்னு அப்போழுது  தான்  எங்களுக்கு புரிந்தது ...


எல்லாருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியே ... ...







அப்போ எங்கள்  படகில் வந்த காவலரிடம் இது ஒன்னும் பண்ணாது  இல்ல ன்னு கேட்டது க்கு ...அவர் சிரிச்சிட்டே தலையை ஆட்டினார் ... இந்த கேள்வி எல்லாரும் கேப்பாங்க போல ன்னு நினைத்துக் கொண்டோம் ...


சுற்றி பார்க்கும் போது  இது போல இருந்த எல்லா திட்டிலும் முதலைகள்  இருந்தன ...

இப்போ தகவல்கள் சேகரிக்கும் போது  தான்  தெரிந்தது அங்கு 50க்கும்  மேல் முதலைகள்  உள்ளன என்று ...






















முதலைகளை இத்தனை  அருகில்  காணும் போது  கொஞ்சம் பயமாக தான் இருந்தது ...


















ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தின் படகு பயணத்தையும் , அங்கு பார்த்த முதலைகளையும் பார்த்தோம் ... அடுத்த பதிவில் இன்னும் சில காட்சிகள் தொடரும் ...

அன்புடன்,
அனுபிரேம்








6 comments:

  1. வணக்கம் சகோதரி

    படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாக இருக்கின்றன. முதலைகளை அருகில் பார்க்கும் போது பயமாக த்தான் இருந்திருக்கும். பசுமை மிகுந்த மரங்களையும் அவற்றில் பறவைகளையும் கண்ட போது மனதுக்கு ரம்மியமாக உள்ளது.

    காணொளியும் கண்டேன். முதலைகள் தண்ணிரில் இருக்கும் போது அதிக பலம் என்பார்கள். அவைகள் நிறைந்திருக்கும் தண்ணீரில் படகு பயணம் கொஞ்சம் ரிஸ்க்தான். அந்த திட்டில் அவை நகரும் போதே பயமாகத்தான் உள்ளது. எப்படியோ நிறைய பேர்கள் துணிச்சலாக பயணித்து பார்த்து வந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. அழகான இடம்.
    முதலைகள் திட்டில் அமர்ந்து கொண்டு பார்ப்பது பயமாய் தான் இருக்கிறது.
    மரங்களில் பறவைகள் அழகு.

    ReplyDelete
  3. ஆஹா.... முதலைகள்.... படங்கள் அழகு. பொதுவா முதலைகள் வத வதன்னு குட்டி போடும் (முட்டையிலிருந்து குட்டிகள்), இந்த மாதிரி இயற்கைச் சூழலில்

    ReplyDelete









  4. பட்ங்கள் எல்லாமேஅழகாக இருக்கின்றன. நல்ல அனுபவம்.

    துளசிதரன்

    அனு. சூப்பர். பக்கத்துல முதலைகள் பார்த்தது வாவ். நான் பார்த்தது ரொம்ப வருடங்களுக்கு முன் அப்போ படம் எல்லாம் எடுக்க முடியலை. போன பதிவில் சொல்ல நினைத்தேன் பறவைகள் பார்க்க போட்டில் போனது பற்றி அடுத்த பதிவுன்னதும் முதலை பார்த்தீங்களான்னு கேட்க நினைத்து விடுபட்டுப்போனது.

    முதலைகள் த்ண்ணிக்கு அடில இருந்து போட்டை கவுத்தினானு நான் நினைச்சுப் பார்த்ததுண்டு ஹா ஹா ஹா ஹா

    கீதா




    ReplyDelete
  5. படங்கள் அழகு. காணொளியும் கண்டேன்.

    முதலைகள் - சில வனப்பயணங்களில் கண்டிருக்கிறேன். சென்னை முதலைப் பண்ணையிலும் கண்டு ரசித்திருக்கிறேன்.

    ReplyDelete