11 July 2020

ஆறாம் நாள் - தேனூர் மண்டபம்



ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. அதாவது பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர்,பின்  வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். 





அதன்பிறகு சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து சேருகிறார் அழகர்.

 



தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். 




திருக்கோவிலில் நடைபெற்ற  இந்த வருட விழா காட்சிகள் ...


ஏகாந்த சேவை

 சேஷ வாகனத்தில்


கருட வாகனத்தில் 




                சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். 

பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார். 

உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு....

 சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என கூறினார்  துர்வாசர். 

அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் இங்கு  வருகிறார் .






பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். 

அன்று இரவு  முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களுக்கு  அருள் புரிகிறார்  அழகர்.....
















திருவாய்மொழி
மூன்றாம் பத்து
ஒன்றாம் திருவாய்மொழி – முடிச்சோதி
திருமாலிருஞ்சோலை அழகரது எழிலை அநுபவித்தல்

2905

மழுங்காதவைந்நுதிய சக்கரநல்வலத்தையாய் * 
தொழுங்காதற்களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே * 
மழுங்காதஞானமே படையாக * மலருலகில் 
தொழும்பாயார்க்கு அளித்தால் உன்சுடர்ச்சோதி மறையாதே?


2906

மறையாயநால்வேதத்துள்நின்ற மலர்ச்சுடரே! * 
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்திடந்துண்டு மிழ்ந்தளந்தாய்! * 
பிறையேறுசடையானும் நான்முகனும் இந்திரனும் *
இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே.



2907

வியப்பாயவியப்பில்லா மெய்ஞ்ஞானவேதியனை * 
சயப்புகழார்பலர்வாழும் தடங்குருகூர்ச்சடகோபன் * 
துயக்கின்றித்தொழுதுரைத்த ஆயிரத்துள்இப்பத்தும் * 
உயக்கொண்டுபிறப்பறுக்கும் ஒலிமுந்நீர்ஞாலத்தே. (2)


அழகர்   திருவிழாவின்  படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம்





1 comment:

  1. விழா நிகழ்வுகள் சிறப்பு. படங்களை ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete