27 July 2020

ஆண்டாள் புஷ்ப பல்லக்கு மற்றும் தேரோட்டம்

வாழ்க வளமுடன் 












8 ஆம் திருநாள்  காலை ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் - தந்தப் பல்லக்கு, 
இரவு ஸ்ரீஆண்டாள் -புஷ்ப பல்லக்கு,  ஸ்ரீரெங்கமன்னார் - குதிரை வாகனம்,


எட்டாம் நாள் ஆண்டாள் தங்கப் பல்லக்கிலும் ரங்கமன்னார் தந்தப் பல்லக்கிலும் வீதியுலா வருவர்.  இரவு ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும் ரங்கமன்னார் குதிரை வாகனத்திலும் வீதியுலா வருவர்.

 இரவு 11:30 மணியில் இருந்து 12:30 மணிவரை திருத்தேர் கடாக்ஷித்தல் நடைபெறுகிறது. 















இந்த வருட சேவை 8 ஆம் திருநாள்




9 ஆம் திருநாள் 
 ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் திருவாடிப்பூரம் திருத்தேர்..... 








இந்த வருடம்   ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் திருவாடிப்பூரம்
 தங்கத் திருத்தேர் சேவை 













நாச்சியார் திருமொழி
ஏழாம் திருமொழி - கருப்பூரம் நாறுமோ
பாஞ்சஜன்னியத்தைப் பத்பநாபனோடுஞ் சுற்றமாக்குதல்



உண்பதுசொல்லில் உலகளந்தான்வாயமுதம் * 
கண்படைகொள்ளல் கடல்வண்ணன்கைத்தலத்தே * 
பெண்படையார் உன்மேல் பெரும்பூசல்சாற்றுகின்றார் * 
பண்பலசெய்கின்றாய் பாஞ்சசன்னியமே!

8 574

பதினாறாமாயிரவர் தேவிமார்பார்த்திருப்ப * 
மதுவாயில்கொண்டாற்போல் மாதவன்தன்வாயமுதம் * 
பொதுவாகஉண்பதனைப் புக்குநீயுண்டக்கால் * 
சிதையாரோ? உன்னோடு செல்வப்பெருஞ்சங்கே!

9 575


பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும் * 
வாய்ந்தபெருஞ்சுற்றமாக்கிய வண்புதுவை * 
ஏய்ந்தபுகழ்ப்பட்டர்பிரான் கோதைதமிழ் ஈரைந்தும் * 
ஆய்ந்தேத்தவல்லாரவரும்  அணுக்கரே. (2)

10 576



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......


திருவிழாவின் படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. காணக் காணத் திகட்டாத
    தெய்வீகத் திருக்கோலங்கள்...

    தங்களால் தரிசித்துக் கொண்டேன்...
    மகிழ்ச்சி.. நன்றி..

    ReplyDelete
  2. இந்த இடுகையை மிஸ் செய்திருக்கிறேன்.

    இந்த இடுகையின் மூலமாக ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசித்தேன். மிக்க நன்றி

    ReplyDelete
  3. படங்கள் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete