17 July 2020

அரணாரை அருள்மிகு ஸ்ரீ நீலியம்மன், ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவில் - பெரம்பலூர்.

 வாழ்க வளமுடன் 

இன்று சிறப்பான ஆடி வெள்ளிக்கிழமை ...

இன்று   ஆலயதரிசனம் வழியாக பெரம்பலூர் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நீலியம்மன், ஸ்ரீ செல்லியம்மன்  திருக்கோவில் தரிசனம்  காணலாம்....




பெரம்பலூர் மாவட்டத்தில் அரணாரை என்னும் கிராமத்தில், தனலட்சுமி சீனிவாசன் கல்லூரிக்கு எதிர் புறத்தில் அமைந்துள்ளது  இக்கோவில். 






இங்கு உள்ள நீலியம்மன் செல்லியம்மன் இருவரும்  அக்கா-தங்கை,  இவ்விருவரும்  இங்கு வரும் மக்களுக்கு  வேண்டிய வரம் தரும் தெய்வ சக்திகள். அமர்ந்த திருக்கோலத்தில் கையில் ஆயுதம் ஏந்தி, இவ்விருவரும் மக்களுக்கு   அருள் புரிகிறார்கள் .











மேலும் இந்த கோவிலில்  எல்லைமுத்துசாமி, பெரியசாமி , கருப்பண்ணசாமியும்  தனி சன்னதியில் அருள் புரிகின்றனர். நவகிரக சன்னதிகளும் இங்கு உள்ளன.


கோவிலின் பக்கவாட்டு தோற்றம் ....









கோவிலின் பின்புறத்தில் பெரிய குளம் உள்ளது.   




 பெரம்பலூர் மற்றும் இதனை சுற்றியுள்ள பல  ஊர்களில் உள்ள மக்களுக்கு இந்த அம்மன்  குலதெய்வம். அதனால் பல வீடுகளில் இந்த பெயர்களை காணலாம்.





அமைதியான இடத்தில் அமர்ந்து தன்னை தேடி வரும் மக்களுக்கு நீலியம்மனும், செல்லியம்மனும் காவல் புரிகின்றனர். 

மக்களின் மன  குறையை நீக்கி , அமைதி தரும் இனிய திருக்கோவில் . 



பேருந்து சாலையிலிருந்து கோவிலின் பிரிவு சாலை 









அபிராமி அந்தாதி...

21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய

மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்
சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை
பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே.




22. இனிப் பிறவா நெறி அடைய

கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே.



23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க

கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.



24. நோய்கள் விலக

மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.




25. நினைத்த காரியம் நிறைவேற

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.


ஓம்சக்தி ....
அன்னையின் திருவடிகளே சரணம்




அன்புடன் 
அனுபிரேம் 




3 comments:

  1. படங்களும் தகவல்களும் சிறப்பு.

    ReplyDelete
  2. அழகான படங்களுடன் புதிதாய் ஒரு கோயிலைப் பற்றி தெரிந்து கொண்டேன்..

    நலம் வாழ்க..

    ReplyDelete
  3. அழகான படங்களுடன் நீலி அம்மன் செல்லி அம்மனை தரிசிக்கத் தந்தீர்கள்... அருமை.

    ReplyDelete