16 July 2020

பூங்காவும், பறவைகள் அருங்காட்சியகமும் ....

வாழ்க வளமுடன் 



முந்தைய பதிவுகள் ...

1.குடகு  மலை காற்றில் 
2. கும்பஜ்...
3.திப்புவின் கோடை கால மாளிகை...
4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்
5.தங்கக்கோயில் -பைலகுப்பே
6.காவேரி  நிசர்காதமா
7. ஒரு அழகிய தீவு .... நிசர்காதமா
8.செல்லும் வழியில்
9.தலைக்காவேரியிலிருந்து ...
10.பிரம்மகிரி மலைத் தொடர் ...
11.பாகமண்டலேஸ்வரா கோவில்


ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தின் படகு பயணத்தையும் , அங்கு பார்த்த முதலைகளையும் முந்தைய பதிவில் பார்த்தோம் .. இன்று இன்னும் சில காட்சிகள் 
















அழகான பராமரிப்பில் அங்கிருந்த பூங்கா...













வழி எங்கும் பறவைகள் பற்றிய குறிப்புகள் வைக்கப்பட்டு இருந்தன...



மாலை நேரத்துக்  காட்சிகள் ....









பறவைகள் பற்றிய சிறு அருங்காட்சியகமும் இங்கு உள்ளது. அவ்விடத்தில் பறவைகள் பற்றிய தகவல்களும்,படங்களும் காட்சிப் படுத்தபட்டுள்ளன.   







இங்கு அனைத்தையும் கண்டு ரசித்த பின் பெங்களூர் நோக்கி எங்களது பயணத்தை  ஆரம்பித்தோம். 


மூன்று நாட்கள் பயணத்தில் பல இடங்களை கண்டு மகிழ்ந்து எங்கள்  பயணத்தை சிறப்பாக நிறைவு செய்தோம். மிக மகிழ்ச்சியான பயணம்.

பொதுவாக நாங்கள் எங்கள்  குடும்பத்துடன் செல்லும் பயணங்களில் இட  தேர்வு, தங்குமிடம், பயண முறைகள் என அனைத்தையும் நாங்கள் திட்டமிடுவோம். ஆனால்  இந்த பயணத்தில் இந்த வேலை எதுவும் எங்களுக்கு இல்லை. 

அனைத்தையும் எங்கள் நண்பர்களே கவனித்துக் கொண்டார்கள், இதுவும் மிக சிறிய கால  அளவில் முடிவு செய்யப்பட்ட பயணம், அதனால் முடிந்த அளவு விரைவாக பயண வாகனத்தையும், தங்குமிடத்தையும் முடிவு செய்தோம்.

 அடுத்து எங்கு செல்ல வேண்டும் என்ற பயண அட்டவணையும் அனைவரும் கலந்தாலோசித்து விரைவாக  செய்தோம் .

எங்களுக்கு மிக  புதுமையான அனுபவம்  இந்த பயணத்தில், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தனியே யோசித்து கவலைப்  படாமல் , நண்பர்களின் வழிகாட்டுதலில் இனிமையாக அமைந்த  பயணம் ......

முடிந்த அளவு படங்கள் மற்றும் காணொளிகளின்  வழி  நாங்கள் கண்டு ரசித்த அனைத்தையும் இங்கும் பதிவு செய்தேன். தொடர்ந்து வாசித்த  நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல ...






 



அன்புடன்,
அனுபிரேம்


















6 comments:

  1. இனிமையான பயணமாக அமைந்திருக்கிறது. தொடரட்டும் பயணம்.

    அழகான படங்கள்.

    ReplyDelete
  2. எனக்கும் தலைக்காவிரி சென்றுவரவேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை

    ReplyDelete
  3. பறவைகள் சரணாலயமும் மற்ற படங்களும் மிக அழகாக அமைந்திருந்தன.

    ReplyDelete
  4. படங்கள் ரம்யமாக இருக்கின்றன.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அழகான இயற்கையின் சிறப்பை காட்டும் படங்கள்.மேலும் பயணங்கள் இனிதாக அமைந்து விட்டால் அதைவிட சந்தோஷமும் வேறில்லை. பறவை அருங்காட்சியகமும் அழகாக உள்ளது. படங்கள் நாங்களும் உங்களுடன் பயணித்து, கண்டு களித்த உணர்வை தந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு.

    ReplyDelete