12 August 2021

அம்பாள் வெள்ளி மஞ்சத்தில் கிளி மாலையுடன் ....

ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஆடி பூரம் திருவிழா ....

முந்தைய பதிவு ....

 ஆறாம் நாள் மாலை  -அன்னை அகிலாண்டேஸ்வரி பல்லக்கில் எழுந்தருளினாள்....









ஆடி பூரம் திருவிழா 7-ம் நாள் ஸ்ரீ அம்பாள்  வெள்ளி ரிஷப வாகனத்தில்..






எட்டாம்  நாள் ஸ்ரீ அம்பாள்   சிம்ம வாகனத்தில்..







ஒன்பதாம்  நாள் மாலை  - அன்னை அகிலாண்டேஸ்வரி  வெள்ளி மஞ்சத்தில்  கிளி மாலை சாற்றி கொண்டு   அருட்காட்சி  வழங்கினாள் ...





 பத்தாம்  நாள் மாலை - அன்னை அகிலாண்டேஸ்வரி    பல்லக்கில் எழுந்தருளுதலும் பின்னர் சூர்ணாபிஷேக தீர்ததம் வழங்குதலும் நடை பெற்றது .... 







பத்தாம் நாள் மாலை -  அன்னை  அகிலாண்டேஸ்வரி மூலவர் வருடத்திற்கு ஒரே நாள் மட்டுமே மடிசார் சாற்றி கொள்ளுதலும் மற்றும் ஏற்றி இறக்குதல் என்னும் ஆரோகன அவரோகன   உற்சவமும் .....பின்னர் உற்சவர் அகிலாண்டேஸ்வரி அம்பிகைக்கும் மடிசார் சாற்ற பெற்று ஏற்றி இறக்குதல் வைபவமும்  நடைபெற்றது..... 








7.075.திருவானைக்கா

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்


சுவாமிபெயர் - சம்புகேசுவரர்.

தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.


764

தந்தை தாய்உல குக்கோர்

தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்

பந்த மாயின பெருமான்

பரிசுடை யவர்திரு வடிகள்

அந்தண் பூம்புனல் ஆனைக்

காவுடை ஆதியை நாளும்

எந்தை என்றடி சேர்வார்

எம்மையும் ஆளுடை யாரே.

7.075.4


உலகம் எல்லாவற்றிற்கும் தந்தையாய், ஒப்பற்ற மெய்ப்பொருளாய் உள்ளவனும், உண்மையான தவத்தைச் செய்வோர்க்கு உறவான பெருமானும், அன்புடையவர்க்குச் சிறந்த தலைவனும் ஆகிய, அழகிய, குளிர்ந்த பூக்களையுடைய, நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, 'இவனே எம் தந்தை' என்று அறிந்து, நாள்தோறும் அடிபணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்.


765

கணைசெந் தீஅர வம்நாண்

கல்வளை யுஞ்சிலை யாகத்

துணைசெ யும்மதில் மூன்றுஞ்

சுட்டவ னேயுல குய்ய

அணையும் பூம்புனல் ஆனைக்

காவுடை ஆதியை நாளும்

இணைகொள் சேவடி சேர்வார்

எம்மையும் ஆளுடை யாரே.

7.075.5


பொருந்திய உலகம் உய்தற்பொருட்டு, சிவந்த நெருப்பு அம்பாகியும், பாம்பு நாணியாகியும், மலை வளைகின்ற வில்லாகியும் நிற்க, ஒன்றற்கொன்று துணை செய்கின்ற மதில்கள் மூன்றையும் எரித்தவனாகிய, எங்கும் சென்று சேர்கின்ற அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் அவனது இரண்டு செவ்விய திருவடிக்கண் பணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்.



766

விண்ணின் மாமதி சூடி

விலையிலி கலனணி விமலன்

பண்ணின் நேர்மொழி மங்கை

பங்கினன் பசுவுகந் தேறி

அண்ண லாகிய ஆனைக்

காவுடை ஆதியை நாளும்

எண்ணு மாறுவல் லார்கள்

எம்மையும் ஆளுடை யாரே.

7.075.6


விண்ணில் உள்ள சிறந்த பிறையைக் கண்ணியாகச் சூடி, விலைப்படும் தன்மை இல்லாத அணிகலங்களை அணிகின்ற தூயவனும், பண்ணினை ஒத்த சொல்லை உடைய மங்கையது பங்கை உடையவனும், ஆனேற்றை விரும்பி ஏறுபவனும், யாவர்க்கும் தலைவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் நினையுமாற்றினை வல்லவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையராவர்.



அன்னை அகிலாண்டேஸ்வரி திருவடிகளே சரணம் ...


அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் தரிசனம்... மகிழ்ச்சி.

    ReplyDelete