அன்பில் மாரியம்மன் திருக்கோவில் , அன்பில், லால்குடி, திருச்சி
திருச்சியில் இருந்து 30 கிமீ தொலைவும்....லால்குடியில் இருந்து 7கிமீ தொலைவிலும் உள்ளது அன்பில் மாரியம்மன் திருக்கோவில்.
வரலாறு
இந்த அன்பில் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலின் உபக்கோவிலாகும். சுமார் 700 ஆண்டுகள் பழமையான கோவில், இத்திருக்கோவிலில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வரும்பொழுது வேப்பமரத்தடியில் அம்மன் தங்கியதாக கூறப்படுகிறது.
இத்திருக்கோவிலை முதலாங்க சக்கரவர்த்தி கட்டியதாக கூறப்படுகிறது.
மூலவர் சுதை வடிவில் உள்ளதால் இங்கே அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது.
அம்மனுக்கு முன் கீழே சுயம்பு லிங்கவடிவமாக மாரியம்மன் காட்சி தருகிறாள். இந்த சுயம்பு அன்னைக்கே அபிஷேகம் நடைபெறுகிறது.
தீர்த்தம் - கொள்ளிடம்
தலவிருட்சம் - வேப்பமரம்
அம்மன் சன்னதிக்கு செல்லும் வழி |
சிறப்புகள்
சமயபுரம், நார்த்தா மலை, வீரசிங்க பேட்டை, கண்ணனூர், புன்ணை நல்லூர், திருவேற்காடு, வளம்பக்குடி மாரியம்மன் ஆகிய சிறப்பு மிக்க அம்மன்களுக்கு, அன்பில் மாரியம்மன் மூத்தவளாம்,
அதாவது மூத்தசகோதரி.
அன்பில் மாரியம்மனுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன.
சமயபுரம் மாகாளிகுடி கோயில் அருகில் வலது புறத்தில் ஓர் தெய்வீக வீட்டில் புற்றோடு தன் குழந்தையோடு தங்கை மகமாயி அனுமதியோடு அமர்ந்திருக்கிறாள், மற்ற திருக்கோவில்களில் அம்மனுக்கு குழந்தை கிடையாது,
கொள்ளிடகரையில் வயல்வெளியில் அமைந்துள்ள இயற்க்கை கொஞ்சும் இடத்தில் வேப்ப மரம் சூல கோவில் கொண்டு இருக்கிறாள் அன்பில் மாரியம்மன்.
சன்னதிகள் -
கோவிலின் தென்மேற்கில் விநாயகர் தனிச்சன்னதி ,
வடமேற்கில் ரேணுகாதேவி தனிச்சன்னதி,
வடக்கில் உற்சவர் சன்னதி,யாகசாலை,
காவல் தெய்வம் கருப்பண்ணசாமி,
மாரியம்மனின் குழந்தைகளான செல்லாண்டியம்மன், காமாஷியம்மன், பரமணார், சங்கிலிகருப்பன், மதுரைவீரன், பேச்சியம்மன், சாம்பான் ஆகியோர் சன்னிதி கொண்டுள்ளனர்.
ஆலயத்தின் ஈசான்யத்தில் வெண்குதிரை காட்சித்தருகிறது.
வடகிழக்கில் நாகதேவதைகள் புற்று உள்ளது.
ரேணுகா தேவி சன்னதி |
திருவிழாக்கள் -
வைகாசி - 5 ம் நாள் பஞ்சப்பிரகார உற்சவம், 6 – ம் நாள் விடையாற்றி நடைபெறும்.
ஆனி - மகாசண்டி ஹோமம் நடைபெறும்.
பங்குனி - முதல் ஞாயிறு பூச்சொரிதல் நடைபெறும் பின்னர் 15 நாள் அம்மன் விரதம், அந்த சமயத்தில் அம்மனுக்கு மாவிளக்கு,இளநீர், துள்ளு மாவு மட்டும் படையல் வைக்கப்படும்.
பங்குனி - இரண்டாம் ஞாயிறு அக்னிசட்டி ஏந்தி ஆலய அர்ச்சகர் கோவிலை வலம் வருவார்.
பங்குனி - மூன்றாவது ஞாயிறு குடியேறுதல்,கொடியேற்றம் பின்னர் அடுத்து பத்து நாட்கள் திருவிழா,
பிரம்மோற்சவத்தில் அம்மன் கமலவாகனம், ரிஷப வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், அன்னபட்சி வாகனம், காமதேனு, குதிரை வாகனம், வெண்ணெய் தாளி அலங்காரத்தில் கண்ணாடி பல்லக்கிலும் வீதியுலா வந்து பக்த்தர்களுக்கு காட்சி தருவாள் ,கடைசி நாள் திருவிழா அன்று திருத்தேர் வடம் பிடித்தல்.
மாலை தீர்த்தவாரி மறுநாள் விடையாற்றியுடன் பங்குனி திருவிழா நிறைவடையும்.
காளிவேஷம்
திருவிழா நாளில் தேருக்கு அடுத்து இங்கே காளிவேஷம் மிகவும் பிரசித்தி. அன்பில் மற்றும் சுற்றியுள்ள ஊர்களான வழுதியூர், ஆதிகுடி, லால்குடி, மணக்கால் மண்டபம் போன்ற ஊர்களில் இருந்து வம்சாவழியாக சில குடும்பங்களில் இருந்து காளிவேடம் இட்டு நடனமாடி கோவிலுக்கு வருவார்கள்.
மிகவும் அமைதியான இடத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அன்னை அருள் புரிகிறாள் .....
வேற்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி மாரி
நாற்கதியும் தந்திடுவாய் ஞானதேவி மாரி
நீ நாவினிலே வந்திடுவாய் நாதமாக மாரி
ஆவலுடன் ஆடிவா நீ நாகமாக மாறி
கருநாகமாக மாறி கருமாரி உருமாறி மகமாயி
கற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரி
அற்புதமாய் உலகினையே ஆட்சி செயுயம் மாரி
கற்பூர ஜோதியிலே காட்சி தரும் மாரி
அற்புதமாய் உலகினையே ஆட்சி செய்யும் மாரி
கருணை உள்ளம் கொண்டவளே கண்ணான மாரி
பொற்காலம் வழங்கிடுவாய் பொன்னாக மாரி (வேற்கா)
கரக ஆட்டம் ஆடி வந்தோம் கருமாரி
மனை உருகிடவே நாடி வந்தோம் முத்துமாரி
பம்பை உடுக்கை முழங்கிடவே ஆடி வரும் மாரி
உன்னைக் கும்பிடவே ஓடிவந்தோம் அம்பிகையே மாரி (வேற்கா)
ஓம் சக்தி ஓம் ...
ஓம் சக்தி ஓம் ...
அனுபிரேம்
இது தேவாரப்பாடல் பெற்ற, மங்களாசாசனம் பெற்ற கோயில்களைக் கொண்ட ஊர் என்ற பெருமையையும் கொண்டுள்ளதாக என் நினைவு.
ReplyDeleteபடங்கள் மிகவும் தெளிவு
ReplyDeleteவிளக்கவுரையும் அருமை
தகவல்கள் நன்று. இதுவரை இக்கோவில் பற்றி கேள்விப்பட்டதில்லை.
ReplyDelete