09 August 2021

ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஆடி பூரம் திருவிழா

 திருவானைக்கோயில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் ஆடி பூரம் திருவிழா -


கொடியேற்றம் ...










இரண்டாம்  நாள் - அம்பாள் கிளி வாகனத்தில் ..






 மூன்றாம் நாள்   -  அன்னை அகிலாண்டேஸ்வரி கேட்டவை எல்லாம் வாரி வழங்கிடும் கற்பக விருட்சமாக காமதேனு வாகனத்தில் எழுந்தருளினாள்...





நான்காம்  நாள் - அம்பாள் சந்திர பிரபை  வாகனத்தில் ...






ஐந்தாம்  நாள் - அம்பாள்  வெள்ளி ரிஷப வாகனத்தில்..





7.075.திருவானைக்கா

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்


சுவாமிபெயர் - சம்புகேசுவரர்.

தேவியார் - அகிலாண்டநாயகியம்மை.



761

மறைக ளாயின நான்கும்

மற்றுள பொருள்களும் எல்லாத்

துறையும் தோத்திரத் திறையும்

தொன்மையும் நன்மையும் ஆய

அறையும் பூம்புனல் ஆனைக்

காவுடை ஆதியை நாளும்

இறைவன் என்றடி சேர்வார்

எம்மையும் ஆளுடை யாரே.

7.075.1


வேதங்கள் நான்கும் மற்றைய பொருள்களும், பல சமயங்களும், அவற்றில் புகழ்ந்து சொல்லப்படும் கடவுள்களும், இவை அனைத்திற்கும் முன்னேயுள்ள முதற்பொருளும், வீடுபேறும் என்கின்ற இவை எல்லாமாய் நிற்கின்ற ஒலிக்கும் அழகிய நீரையுடைய திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, 'இவனே முதல்வன்' என்று அறிந்து, நாள்தோறும் அடிபணிகின்றவர், எம்மையும் அடிமைகொண்டு ஆளுதலுடையவராவர்.



762

வங்கம் மேவிய வேலை

நஞ்செழ வஞ்சர்கள் கூடித்

தங்கள் மேல்அட ராமை

உண்ணென உண்டிருள் கண்டன்

அங்கம் ஓதிய ஆனைக்

காவுடை ஆதியை நாளும்

எங்கள் ஈசன்என் பார்கள்

எம்மையும் ஆளுடை யாரே.

7.075.2


மரக்கலம் பொருந்திய கடலின்கண் நஞ்சு தோன்ற, தங்கள் மேல் வந்து தாக்காது தடுத்துக் கொள்ளுதற் பொருட்டுச் சூழ்ச்சி செய்த தேவர்கள் ஒருங்கு கூடிச்சென்று 'இந் நஞ்சினை உண்டருளாய்' என்று வேண்டிக்கொள்ள அவ்வேண்டுகோளை மாறாது ஏற்று உண்டு, அதனால், கறுத்த கண்டத்தை உடையவனாகியவனும், வேதத்திற்கு உரிய துணை நூல்களைச் செய்தவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, 'இவனே எங்களுக்குத் தலைவன்' என்று நாள்தோறும் அன்பு செய்கின்றவர். எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர்.



763

நீல வண்டறை கொன்றை

நேரிழை மங்கை ஓர்திங்கள்

சால வாள்அர வங்கள்

தங்கிய செஞ்சடை எந்தை

ஆல நீழலுள் ஆனைக்

காவுடை ஆதியை நாளும்

ஏலு மாறுவல் லார்கள்

எம்மையும் ஆளுடை யாரே.

7.075.3


நீல நிறத்தையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரும், நுண்தொழில் அமைந்த அணிகளை அணிந்த மங்கை ஒருத்தியும், பிறை ஒன்றும், பல கொடிய பாம்புகளும் தங்கியிருக்கின்ற சிவந்த சடையையுடைய எம் தந்தையும், ஆல் நிழலில் இருப்பவனும் ஆகிய, திருவானைக்காவைத் தனதாக உடைய முதல்வனை, நாள்தோறும் அவன் தம்மொடு பொருந்தும் செயலினைச் செய்ய வல்லவர். எம்மையும் அடிமை கொண்டு ஆளுதலுடையவராவர்.

அன்னை அகிலாண்டேஸ்வரி திருவடிகளே சரணம் ...


தொடரும் ...

அன்புடன் 
அனுபிரேம் 

1 comment:

  1. படங்கள் மனதைக் கவர்கின்றன. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete