ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருவாடிப்பூர பிரம்மோற்சவம்..
5 ஆம் திருநாள் இரவு ஐந்து பெருமாள் கருட சேவை நடைபெற்றது....
ஸ்ரீஆண்டாள் (பெரிய அன்ன வாகனம் )
பெரியாழ்வார் (சின்ன அன்ன வாகனம் )
ரங்கமன்னார் (தங்க கருட வாகனம்)
பெரிய பெருமாள் (கருட வாகனம்)
திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் (கருட வாகனம்)
சுந்தரராஜ பெருமாள்(காட்டழகர்) (கருட வாகனம்)
திருத்தங்கல்அப்பன் (தங்க கருட வாகனம்) ...
நாச்சியார் திருமொழி
ஐந்தாம் திருமொழி - மன்னு பெரும்புகழ்
எம்பெருமானைக் கூவியழைக்கும்படி குயிலுக்கு கூறுதல்
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி
வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை * உகந்தது காரணமாக என்
சங்கு இழக்கும் வழக்கு உண்டே? *
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
பொதும்பினில் வாழும் குயிலே! *
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என்
பவள வாயன் வரக் கூவாய். (2)
1 545
வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட
விமலன் எனக்கு உருக் காட்டான் *
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும்
உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும் *
கள் அவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்து இசை பாடும் குயிலே! *
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என்
வேங்கடவன் வரக் கூவாய்.
2 546
இணையத்தில் இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
அன்புடன்
அனுபிரேம்
படங்கள் நன்று.
ReplyDelete