21 August 2021

திருவோண நட்சத்திரத்தில் ....

 ஆவணி- திருவோணம்-   வாமன  ஜெயந்தி

 சுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபரிடத்தில் பலியை அடக்குவதற்காக ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.







    திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம்.


 பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க, பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.



 (7)

குறள் பிரமசாரியாய் மாவலியைக்

குறும்பு அதக்கி அரசு வாங்கி

இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை

கொடுத்து உகந்த எம்மான் கோயில்

எறிப்பு உடைய மணி வரை மேல்

 இளஞாயிறு எழுந்தாற்போல் அரவு அணையின்வாய் 

சிறப்பு உடைய பணங்கள்மிசைச் செழுமணிகள்

 விட்டு எறிக்கும் திருவரங்கமே


418

சிறிய ப்ரமசாரி வடிவம் கொண்டு மாவலியிடம் சென்று

மூன்றடி மண்ணை யாசித்து, அவனின் கர்வத்தை அடக்கி,

அவனுடைய ராஜ்யத்தைப் பெற்று, பின்பு நொடிப்பொழுதில்,

பாதாளத்தை அவனுக்கு ஏற்ற இருப்பிடமாகக் கொடுத்த

எம்பெருமானின் கோயில், ஜோதியுடன் விளங்கும் ஒரு நீல

ரத்ன மலையின் மேலே இளம் சூரியன் உதித்தாற்போல்,

சிவந்த ரத்தினங்கள் ஒளிரும் தலைகளை கொண்ட

பாம்பினைப் படுக்கையாக உடைய

எம்பெருமானின் திருவரங்கமே!






நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே! * 
நீ அன்று உலகு இடந்தாய்  என்பரால் * நீ அன்று 
கார்  ஓதம் முன் கடைந்து, பின் அடைத்தாய் மா கடலை * 
பேர்  ஓத மேனிப் பிரான்! 

30 2211



வாய் மொழிந்து வாமனனாய் மாவலிபால் * மூவடி மண் 
நீ அளந்து கொண்ட நெடுமாலே? * - தாவிய நின் 
எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி * 
அஞ்சாது இருக்க அருள். 

18 2299




வாமனன்!  என் மரதக வண்ணன்! தாமரைக் கண்ணினன்! 

காமனைப் பயந்தாய்! * என்று என்று உன் கழல் பாடியே பணிந்து

தூ மனத்தனன் ஆய்ப் பிறவித் துழதி நீங்க * என்னைத் 

தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே!


8 2858


கண்களால் காண வருங்கொல்? என்று ஆசையால் * 

மண்கொண்ட வாமனன் ஏற, மகிழ்ந்து செல் * 

பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து * 

திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.


5 2978



கொள்வன் நான் மாவலி! மூவடி தா என்ற 

கள்வனே! * கஞ்சனை வஞ்சித்து, வாணனை 

உள் வன்மை தீர * ஓர் ஆயிரம் தோள் துணித்த 

புள் வல்லாய்! * உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?


9 2982







ஓம் நமோ நாராயணாய நமக !!

பெருமான் திருவடிகளே சரணம் ..



அன்புடன்
அனுபிரேம்...

1 comment:

  1. தேர்ந்தெடுத்த படங்கள் அனைத்தும் அழகு. திருவோணம் கொண்டாடும்/கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete