01 January 2020

திருப்பாவை – பாசுரம் 16

நாயகனாய் நின்ற ..


கோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்:













நாயகனாய்நின்ற நந்தகோபனுடைய 

கோயில்காப்பானே! * கொடித்தோன்றும் தோரண 

வாயில்காப்பானே! * மணிக்கதவம் தாள்திறவாய் *

ஆயர்சிறுமியரோமுக்கு * அறைபறை 

மாயன்மணிவண்ணன் நென்னலேவாய்நேர்ந்தான் *

தூயோமாய்வந்தோம் துயிலெழப்பாடுவான் *

வாயால்முன்னம்முன்னம் மாற்றாதேஅம்மா! * நீ 

நேயநிலைக்கதவம் நீக்கேலோரெம்பாவாய். (2)








பொருள்:

எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே!

கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே!

ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக.

மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான்.

 அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம்.

அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம்.

அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே.

மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.



ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. பாடலுக்கு விளக்கம் மிக அருமை.

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  2. பாடலுக்கான விளக்கம் சிறப்பு. தொடரட்டும் பாசுர அமுதம்.

    ReplyDelete