எல்லே! இளங்கிளியே!
"எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!"
அன்புடன்
அனுபிரேம்
"எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!"
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்;
வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்;
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்;
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடு — ஏலோர் எம்பாவாய்.
நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு
சென்ற பாடல் வரை ஆண்டாள் கோபியரை எழுப்பிக்கொண்டிருந்தாள்.
முதல் முறையாக இப்பாடலில் துயிலில் இருந்து விழித்துக்கொண்ட அப்பெண்ணிடம் ஆண்டாள் உரையாடுவதைக் கேட்போம்.
[ஆண்டாள்] இளங்கிளி போன்றவளே என்னே இன்னுமா தூங்குகிறாய் ?
[தோழி] பெண்களே ! இதோ வருகிறேன் ! ‘சில்’ என்று கூச்சலிட்டு எழுப்பாதீர்கள் !
[ஆண்டாள்] நீ வாயாடி. நீ சொல்லும் கட்டுக்கதைகள் முன்னமே நாங்கள் அறிவோமே !
[தோழி] நீங்கள்தான் வாயாடிகள்;பரவாயில்லை; நானே தான் வாயாடியாக இருத்துவிட்டு போகிறேன்
[ஆண்டாள்] நீ உடனே புறப்பட்டு வா! வேறு என்ன வேலை இருக்கிறது ?
[தோழி] எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா ?
[ஆண்டாள்] எல்லோரும் வந்து விட்டார்கள். நீயே வந்து பெண்களின் எண்ணிக்கையைப் பார்.
குவலயாபீட யானையையும் கம்சன் முதலிய பகைவர்களையும் அழித்த கண்ணனின் புகழ் பாட எழுந்துவா.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்
அனுபிரேம்
இனிய காலை வணக்கம்.
ReplyDeleteஇனிமையான பாசுரத்துடன் சிறப்பான பகிர்வு. நன்றி.
பதிவை ரசித்தேன் சகோ
ReplyDeleteவித்தியாசமா அழகா எழுதறீங்க அனு. உரையாடல் வடிவில்...சூப்பர்!!!!!
ReplyDeleteபடங்களும் நல்லாருக்கு
கீதா