06 February 2019

சமணர் குடைவரைக் கோயில்


வாழ்க வளமுடன் ..

 முந்தய பதிவில் சித்தன்னவாசல் பற்றி பார்த்தோம் ..

இன்று சமணர் குடைவரைக் கோயில் ...


பல்லவர் காலத்துக்கு முன்னர் கோயில்கள் செங்கற்களாலும், மரத்தாலும், மண்ணாலும், உலோகங்களாலும் கட்டப்பட்டுவந்தன.

குகைக்கோயில்களையும் - குடவரைக் கோயில்களையும் தமிழகத்தில் முதன்முதலில் கட்டியவர் மகேந்திரவர்மன்தான்.





இவர் சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாறியவர். சித்தன்னவாசல் சமண மத மையமாக இருந்ததை, இங்கு உள்ள கல்வெட்டுகளும் இந்த ஊரைச் சுற்றியுள்ள பழைமையான சமணச் சின்னங்களும் வெளிப்படுத்துகின்றன.

கி.பி.10-ம் நூற்றாண்டு வரை சமண முனிவர்கள் இந்தக் குகையில் தங்கியிருக்க வேண்டும் என்பதற்கு, இங்கு உள்ள கல்வெட்டுகளே ஆதாரம்.   கோயிலுக்குச் செல்லும் பிரிவு சாலையின் கிழக்குப் பகுதியில் அந்தக் காலத்தில் இறந்தவர்களைப் புதைப்பதற்குப் பயன்படுத்திய கல்லறைகளும் - முதுமக்கள்தாழியும் காணப்படுகின்றன.   ஆடல் - பாடல் - நாடகம் - ஓவியம் - சிற்பம் போன்ற கலைகள் பல்லவர் காலத்தில் சிறப்பு பெற்றிருந்தன.






சித்தன்னவாசல் ஓவியங்கள், கிமு 2- கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா, 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கை சிகிரியா, 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாக் குகை ஓவியங்கள் (மத்தியபிரதேசம்) இவற்றுடன் காலத்திலும், வரையும் முறையிலும், தரத்திலும் ஒப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, சித்தன்னவாசல் மட்டுமே முற்கால சமண ஓவியங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.







9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னர் காலத்தில் இந்தக் குகை செப்பனிடப்பட்டது. இளங்கௌதமனார் என்னும் சமணத் துறவி அவறீபசேகரன் ஸ்ரீவல்லப பாண்டியனுடைய உதவியைப் பெற்று இந்தக் குடவரைக் கோயிலை (கி.பி.815 - 862) புதுப்பித்திருக்கிறார்.

 “சித்தன்னவாசல் ஓவியங்கள், பல்லவர் காலத்து ஓவியங்கள்'' என்று வரலாற்று ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறிவந்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள கல்வெட்டுகளிலிருந்து அந்த ஓவியங்கள் பாண்டியர் காலத்தவை என்று தெரியவந்துள்ளது.


படிகள்



குடைவரைக் கோயில்

9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குகைக்கோயில்தான் அறிவர் கோயில். இதன் உள்ளே சமண ஆச்சாரியர்களின் சிலைகளும், விதானத்தில் ஓவியங்களும் காண்ப்படுகின்றன.


மலையின் தொடர்ச்சி ..









இங்கு செல்ல அனுமதி சீட்டு  பெற வேண்டும்...

நாங்கள் அனுமதி சீட்டு பெற்று, மேலே சென்றோம்..
 படிகள் நன்றாக செதுக்கி அளவாக இருந்தன, ஆனால் கைப்பிடி இல்ல ..பெரியவர்கள் ஏறுவது கடினம் ..

பெரிய மண்டபமாக இருக்கும் என எண்ணி சென்றோம் ,ஆனால் அங்கு ஒரு மண்டபம் மட்டுமே ...

 தொல்லியல் துறை அலுவலர் ஒருவர் அங்கு இருந்து விளக்கங்கள் கொடுத்தார் ...மிக சிறப்பாக இருந்தது ..அந்த விளக்கங்களும் , படங்களும் அடுத்த பதிவில் ..

தொடரும்

அன்புடன்
அனுபிரேம்




5 comments:

  1. படங்களும் பகிர்வும் அருமை.

    தொடருங்கள்.

    ReplyDelete
  2. மீண்டும் உங்கள் தளத்தில் பார்த்து ரசித்து வருகிறேன்.

    ReplyDelete
  3. படங்கள் என் ஆசையை தூண்டி விடுகிறது

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான பகிர்வு.

    ReplyDelete
  5. தொல்லியல் துறை அலுவலரின் விளக்கங்களுக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete