15 August 2019

நமது சுதந்திர தினம்

இன்று  நமது 73-வது ஆண்டு சுதந்திர தினம்....







பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் 
பாரத நாடு


1.
ஞானத்தி லேபர மோனத்திலே-உயர் 
      மானத்தி லேஅன்ன தானத்திலே 
கானத்தி லேஅமு தாக நிறைந்த 
      கவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

2.
தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில் 
      ஈரத்தி லேஉப காரத்திலே 
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு 
      தருவதி லேஉயர் நாடு- இந்தப் (பாருக்குள்ளே)

3.
நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப் 
      பன்மை யிலேமறத் தன்மையிலே 
பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின் 
      புகழினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

4.
ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய 
      வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே 
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக் 
      கடலினி லேஉயர் நாடு-இந்தக் (பாருக்குள்ளே)

5.
வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத் 
      தண்மையி லேமதி நுண்மையிலே 
உண்மையி லேதவ றாத புலவர் 
      உணர்வின லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

6.
யாகத்தி லேதவ வேகத்திலே-தனி 
      யோகத்தி லேபல போகத்திலே 
ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம் 
      அருளினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

7.
ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல் 
      காற்றினி லேமலைப் பேற்றினிலே 
ஏற்றினி லேபயன் ஈந்திடும் காலி 
      இனத்தினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

8.
தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனி 
      ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே 
தேட்டத்தி லேஅடங் காத நிதியின் 
      சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)











அனைவருக்கும்  இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ....



அன்புடன்
அனுபிரேம்


8 comments:

  1. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    தங்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். பாரதியாரின் பொருத்தமான பாடல்களும் படங்களும் அருமையாக உள்ளது. முதல் தேசிய கொடி படம் தங்கள் கை வண்ணத்தில் உருவானதா? மிகவும் அருமையாக இருக்கிறது. தங்களுக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி சகோ ..

      ஆனால் பயணத்தின் காரணமாக மிக தாமதமான மறுமொழி .

      அந்த கொடி படம் எங்கள் வீட்டின் சின்னவர் வரைந்தது ...

      Delete
  3. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் அனு.
    குழந்தையின் ஓவியம், பாரதியின் பாடல் பகிர்வு அருமை.

    ReplyDelete
  4. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் அனு

    ஓவியம் மிக அருமை படாலும் தான்.

    கீதா

    ReplyDelete
  6. இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்..

    ஜெய்ஹிந்த்..

    ReplyDelete
  7. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

    சற்றே தாமதமாகவே பதிவுகளுக்கு வர முடிந்தது. இன்றைக்கு தான் பலரின் பதிவுகளும் படிக்கிறேன்.

    ReplyDelete