28 March 2020

திருவங்கத்தில் ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் சந்நிதி .....

வாழ்க   நலமுடன் 

திருவரங்கத்தில் தரிசனம் என்னும் முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இன்று ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் சந்நிதியில் எடுத்த படங்கள் ....











ஜெய் ஸ்ரீ நரசிம்மா ...

தாயார்  சன்னதி 







கோபுர தரிசனம் 












முந்தைய பதிவுகள் .. 


5.நம்பெருமாள் அழகு 5 - இராப்பத்து உற்சவம்

6.நம்பெருமாள் அழகு  6 - திருக்கைத்தல சேவை மற்றும்  வேடுபறி உற்சவம்

7.ஸ்ரீ நம்மாழ்வார் மோக்ஷம் - " திருவடி தொழல் "

8.திருவங்கத்தில்  தரிசனம் .....




திருவாய்மொழி
பத்தாம் பத்து

பத்தாம் திருவாய்மொழி – முனியே

எனக்கு ஆராவமுதாய் எனதாவியை இன்னுயிரை *
மனக்காராமைமன்னிஉண்டிட்டாய்இனியுண்டொழியாய் *
புனக்காயாநிறத்த புண்டரீகக்கண்செங்கனிவாய் *
உனக்கேற்கும்கோலமலர்ப்பாவைக்கன்பா! என்னன்பேயோ!

6
3771


கோலமலர்ப்பாவைக்கு அன்பாகிய என்அன்பேயோ! *
நீலவரைஇரண்டுபிறைகவ்வி நிமிர்ந்ததொப்ப *
கோலவராகமொன்றாய் நிலங்கோட்டிடைக்கொண்ட எந்தாய்! *
நீலக்கடல்கடைந்தாய்! உன்னைப்பெற்றுஇனிப் போக்குவனோ? (2)

7
3772


பெற்று இனிப்போக்குவனோ? உன்னைஎன்தனிப்பேருயிரை *
உற்றஇருவினையாய் உயிராய்ப்பயனாயவையாய் *
முற்றஇம்மூவுலகும் பெருந்தூறாய்த்தூற்றில்புக்கு *
முற்றக்கரந்தொளித்தாய் என்முதல்தனிவித்தேயோ!

8
3773


முதல்தனிவித்தேயோ! முழுமூவுலகாதிக்கெல்லாம் *
முதல்தனிஉன்னையுன்னை எனைநாள்வந்துகூடுவன்நான்? *
முதல்தனிஅங்குமிங்கும் முழுமுற்றுறுவாழ்பாழாய் *
முதல்தனிசூழ்ந்தகன்றாழ்ந்துயர்ந்த முடிவிலீயோ!

9
3774


சூழ்ந்தகன்றழ்ந்துயர்ந்த முடிவில்பெரும்பாழேயோ! *
சூழ்ந்ததனில்பெரிய பரநன்மலர்ச்சோதீயோ! *
சூழ்ந்ததனில்பெரிய சுடர்ஞானவின்பமேயோ! *
சூழ்ந்ததனில்பெரிய என்னவாவறச்சூழ்ந்தாயே. (2)

10
3775


அவாவறச்சூழ்அரியை அயனைஅரனைஅலற்றி *
அவாவற்றுவீடுபெற்ற குருகூர்ச்சடகோபன்சொன்ன *
அவாவிலந்தாதிகளால் இவையாயிரமும் * முடிந்த
அவாவிலந்தாதிஇப்பத்து அறிந்தார் பிறந்தார்உயர்ந்தே. (2)

11
3776

அன்புடன் 
அனுபிரேம் 

2 comments:

  1. அழகான படங்கள். மேட்டழகிய சிங்கர் - ஓவியங்கள் அங்கே வெகு அழகாக இருக்கும்.

    ReplyDelete
  2. There are two other azhakiya singar temples near Sri Rangam. Kattu Azhakiya Singar temple is around 2 km from Sri Rangam temple.

    Attru Azhakiya Singar temple is near Kaveri river side under Kaveri bridge where bridge get downs on the chatram bus stand side.

    ReplyDelete