27 March 2026

16 வார்த்தையில் ஸ்ரீ ராமாயணம்...






 16 வார்த்தையில் ஸ்ரீ ராமாயணம்


“பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்

மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்

இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்

துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்”



விளக்கம்:

1. பிறந்தார் -  ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.


2.வளர்ந்தார்  - தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது.


3. கற்றார் - வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.


4.பெற்றார் - வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.


5.மணந்தார் -  ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.


6.சிறந்தார் - அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.


7.துறந்தார் -  கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.


8. நெகிழ்ந்தார் -

*அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
*குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
*பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
*பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
*அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
*சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
*விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
*எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.


9. இழந்தார் -மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.

10. அலைந்தார் - அன்னை சீதையை தேடி அலைந்தது.

11. அழித்தார் -  இலங்கையை அழித்தது.


12.செழித்தார் - *சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது.
*ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.


13.துறந்தார் - அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.


13.துவண்டார்  - அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.


15. ஆண்டார் -  என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.


16.மீண்டார் - பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது".


திருவல்லிக்கேணி ஸ்ரீ ராமர் திவ்ய  சேவை 















பெரிய திருமொழி

பத்தாம் பத்து

மூன்றாம் திருமொழி - ஏத்துகின்றோம்


                                                           இராமவதாரத்தில் ஈடுபாடு – 2


மாற்றம் ஆவது இத்தனையே*  வம்மின், அரக்கர் உள்ளீர்* 

சீற்றம் நும்மேல் தீர வேண்டின்*  சேவகம் பேசாதே*

ஆற்றல் சான்ற தொல் பிறப்பின்*  அநுமனை வாழ்க என்று* 

கூற்றம் அன்னார் காண ஆடீர்*  குழமணி தூரமே. 7

1874 


        கவள யானை பாய்புரவி*  தேரொடு அரக்கர் எல்லாம்-

துவள,*  வென்ற வென்றியாளன்*  தன் தமர் கொல்லாமே*

தவள மாடம் நீடு அயோத்தி*  காவலன் தன் சிறுவன்*

குவளை வண்ணன் காண ஆடீர்*  குழமணி தூரமே. 8

1875


ஸ்ரீ ராம நாம மகிமை.. ..2018




















ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதா ராம்....
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !



அன்புடன் 
அனுபிரேம் 💖💖

No comments:

Post a Comment