11 April 2020

தலைக்காவேரியிலிருந்து ...

வாழ்க வளமுடன் 




முந்தைய பதிவுகள் ...

1.குடகு  மலை காற்றில் 

2. கும்பஜ்...

3.திப்புவின் கோடை கால மாளிகை...

4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்

5.தங்கக்கோயில் -பைலகுப்பே

6.காவேரி  நிசர்காதமா

7. ஒரு அழகிய தீவு .... நிசர்காதமா

8.செல்லும் வழியில்





குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது.


தலைக்காவிரி, கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பாகமண்டலாவிலிருந்து 7 கி.மி மற்றும் மடிகேரியிலிருந்து 48 கி.மி தொலைவில் உள்ளது.


 கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 1276 மீ. (4186 அடி) ஆகும்.








தலைக்காவேரியில் உள்ள  காவேரி குண்டலா அல்லது பிரம்மா குண்டலா என்னும் ஒரு சதுரவடிவத் தொட்டியே (தீர்த்தவாரி) காவேரி நதியின் பிறப்பிடமாகும்.

இந்தக் குளத்திற்கான நீரை கொண்டு வரும் சிறு பொய்கையாகக் காவேரி பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில் கீழிறங்கி வெகு தூரத்திற்கு அப்பால் காவேரி எனும் நதியாக வெளிப்படுகிறது.

இந்த ஊற்று ஆரம்பிக்கும் இடத்தில், மக்கள் வழிபடுவதற்காக சிறு கோவிலும் உள்ளது.

சிறியதாக  ஒரு சந்நிதியும், அதுக்கு எதிரில் சின்னதா தொட்டிபோல ஒரு அமைப்பும் அதுக்கு எதிரில் செவ்வகவடிவில் ஒரு குளமும், குளத்துப்படிக்கட்டில் சந்நிதியைப் பார்த்து ஒரு நந்தியும் உள்ளன.


இந்த  குளத்தில் குளித்துக் காவேரி அம்மனை வழிபடுவது இங்கு கடைப்பிடிக்கப்படும் வழக்கம். இக்கோவில் மாநில அரசால் 2007 ஆம் ஆண்டுப் புனரமைக்கப்பட்டுள்ளது.








மக்கள் நாணயங்களை இங்கு இருக்கும் சிறு குளத்தில் போட்டு காவேரி அம்மனிடம் வேண்டிக்கொள்கின்றனர்




தலைகாவேரிக்கு மேலே அகத்தியர் காவேரியை சமன்படுத்திய இடத்தில்  ஒரு கோவில் உள்ளது.

இங்கு உள்ள அகத்தீஸ்வரர் (சிவன்) கோவிலில் உள்ள லிங்கம் மிகவும் தொன்மையானது.





காவேரி ஆற்றில் காவேரி அன்னை எழுந்தருளும் ஐப்பசி (துலா) மாதத்தில்  தலைமுழுகுவது புண்ணியம் என்பது ஐதீகம்.

இத்திருத்தலத்தில் தோன்றும் காவிரி ஆறு கர்நாடகம் மற்றும் தமிழக மாநிலங்களில் பாய்ந்தோடி வங்கக் கடலில் கலக்கிறது.



போன பதிவில் பகிர்ந்த வீடியோ தான்  இன்றும் ...


தொடரும் .....


அன்புடன்
அனுபிரேம்




5 comments:

  1. தலைக் காவிரி ...
    இங்கு தரிசனம் செய்ய வேண்டும் என்ற
    ஆவலுண்டு.... பார்க்கலாம்....

    இனிய பதிவு... மகிழ்ச்சி....
    வாழ்க நலம்..ம்

    ReplyDelete
  2. போக வேண்டிய இடம்.. நன்றி...

    https://lkarthik.in

    ReplyDelete
  3. பார்க்க வேண்டிய இடம். மிக அருமை.

    ReplyDelete