19 May 2020

ஆறாம் நாள் ரிஷப வாகனத்தில்...


மதுரை சித்திரைத்  திருவிழா ....

இரண்டாம் நாள் - பூத வாகனம், அன்ன வாகனம்..

மூன்றாம் நாள் -கைலாசபர்வதம் , காமதேனு வாகன உலா..

நான்காம் நாள் தங்க பல்லாக்கு...

ஐந்தாம் நாள் -வேடர்பறிலீலை, தங்கக்  குதிரை வாகன உலா

ஆறாம் நாள் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோயிலைச் சுற்றி வருவா், சுவாமி புறப்படும் முன் திருஞான சம்பந்தா் சமணா்களுடன் வாதிட்டு வெற்றி பெற்ற    லீலை நிகழ்த்தப்பெறும்.



























   அரிகேசரி , அரிமர்த்தன பாண்டியனுக்குப் பிறகு மதுரையைச் சிறப்பாக ஆட்சி செய்தவன்.  'கூன் பாண்டியன்' என்றால் இன்னும் பிரசித்தம். சோழர்குலப் பெண்ணான மங்கையர்க்கரசியை திருமணம் செய்துக் கொண்டான்.

   வைதீக சமயத்தைப் பின்பற்றி வந்த அரிகேசரி, காலப்போக்கில் சமண சமயத்தின் மீது பற்று வரவே சமணத்தைத் தழுவினான். மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்று மக்களும், மன்னனை பின்பற்றி  பெருமளவில் சமண மதத்தைத் தழுவினர். இதைக் கண்டு அரசிக்கு மிகுந்த வருத்தம். அமைச்சர் குலச்சிறையாருக்கோ அரசனுக்கு எதிரில் விபூதி கூட அணிந்து வர முடியாத நிலை.

   இதனால் அரசியும் அமைச்சரும் மன்னன் மீண்டும் சைவமதத்துக்கே திரும்ப வேண்டி தினந்தோறும் சோமசுந்தரக் கடவுளை மனமுருகி வேண்டி வந்தனர். இந்த நிலையில் அந்தணர் ஒருவர் மூலமாக திருஞானசம்பந்தரின் மேன்மையைப் பற்றி  அறிந்துகொண்டனர். ஏவலர் ஒருவரை அனுப்பி, வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு அவரை அழைத்துவர பணித்தனர்.

 வேதாரண்யத்திலி௫ந்து அம்மையின் ஞானப்பால் ப௫கிய சம்பந்தப்பெ௫மான், சைவ மதத்தை காப்பாற்ற மதுரைக்கு வந்தார்.

 மதுரை வந்த சம்பந்தர், சமணர்களுடன் அனல் வாதம் மற்றும் புனல் வாதம் செய்து வெற்றி பெற்று கூன்பாண்டியனின் வெப்பு நோய் நீங்க

 "மந்திரமாவது நீறு" என்னும் திறுநீற்று பதிகத்தை பாடி நோயினை நீக்கி அ௫ளியதோடு அவனது பிறவி கூணினை நீக்கி அவனை நின்றசீர்நெடுமாறப்பாண்டியன் ஆக மாற்றினார். அவனை சைவ சமயத்தை பின்பற்ற வைத்தார்.










திருவிழாத் தத்துவமும் பலனும்  

ஆறாம் நாள் திருவிழா காமாதி ஆறும், கலையாதி ஆறும், பதமுத்தி ஆறும் , வினைக்குணம் ஆறினையும் ஒழித்தற்   பொருட்டு நிகழ்வதாகும். ஆறாம் நாள் இரவு ரிஷப வாகன சேவை மிகவும் முக்கியமானது.

 அடியார்களுக்கு ஆண்டவன் அருள்புரிய ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வருவதை  புராணாதிகளால்  நன்கு அறியலாம். அருள்பெற்ற ஆன்மா ரிஷபமாகும் . அதன் வெள்ளை நிறம் அதனிடத்து எவ்வித மாசும்  இல்லை என்பதை உணர்த்தும்.

தர்மம்  என்ற அறத்தையே நான்கு கால்களாக கொண்டுள்ளது. சமம், விசாரம், சந்தோஷம்,  சாதுங்கம் என்ற  நான்கு அறங்களும் நான்கு கால்களாக அமைந்துள்ளன.

மாசற்ற அறவடிவமான ஆன்மாக்களிடத்து இறைவன் வந்து அமர்வான் என்பதை இது குறிக்கின்றது. இது அனுக்கிரகக்  கோலம்.


திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகம்
2.66 - மந்திரமாவது நீறு 

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே. 1

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே. 2

மதுரை சித்திரைத்   திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. விழா பற்றிய தகவல்களும், படங்களும் வெகு சிறப்பு. தொடரட்டும் திருவிழா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார் ....

      Delete