16 July 2019

பேலூர் சென்னக்கேசவா திருக்கோயில்


சமணர் கோவில்களுக்கு அடுத்து  நாங்கள் சென்ற இடம் பேலூர் சென்னக்கேசவா திருக்கோயில்....







 யாகாச்சி நதியின் ஓரத்தில் கம்பீரமாக வளமையான பகுதியாக இந்நகரம் அமைந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன் பேலூர் என்கிற இந்நகரம் வேலாபுரி என அழைக்கப்பட்டது.

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தக்காணம் வரை ஹோய்சால மன்னர்கள் அரசாண்டனர்.

சாலா என்பவர் புலியுடன் தனியாக மோதினார். அப்போது ஹோய்சாலா ஹோய்சாலா என மக்கள் ஊக்கம் தந்தனர். ( ஹோய் என்றால் கன்னடத்தில் மோது, சாலா – என்பது பெயர்) இரண்டும் இணைந்து ஹேய்சாலா என மாறியது. புலியையும் வென்றார். அந்த சாலாவிற்கு பின் வந்தவர்களே ஹோய்சாலா வம்சம் என அழைக்கப்பட்டனர்.








ஹோய்சாலா நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்திவந்த சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்து வெற்றி பெற்ற விஷ்ணுவர்தன்,   கி.பி. 1117 ஆம் நூற்றாண்டில் பேலூரில் சென்னகேசவருக்கு கோயில் கட்ட தொடங்கினார்.

இத்திருக்கோவில் போர் வெற்றியை குறிக்கவே கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இந்த கோயில் கட்டுமானப்பணி விஷ்ணுவர்தனின் பேரன் வீரபல்லாலா காலத்தில் தான் முடிவுற்றது.





இக்கோயிலின் முகப்பில் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட பெரியகோபுரம் கம்பீரமாக உள்ளது.

கோயில் உள்ளே நுழைந்ததும் 40 அடி உயரமுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கல் கம்பம் தனியாக நிற்கிறது. இந்த பக்கம்  தங்கக் கொடிமரம் .










புலியுடன் போரிடும் வீரன் ..
 








முந்தைய பதிவுகள் ...

















தொடரும்...


அன்புடன்
அனுபிரேம்



4 comments:

  1. படங்கள் எல்லாம் தெளிவாக அழகாய் இருக்கிறது.
    கோவில் வரலாறு தெரிந்து கொண்டேன்.கடைசி படம் தலை அலங்காரம், அணிகலங்கள், ஆடை அலங்காரம் மிக அழகாய் சிற்பிகள் செதுக்கி இருக்கிறார்கள்.
    அனைத்து படங்களிலும் கலைநுட்பம் வியக்க வைக்கிறது.
    பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது.

    ReplyDelete
  2. முன்பு சென்றிருக்கிறேன்.அழகிய கலைநுட்பம் நிறைந்தது.

    ReplyDelete
  3. அழகான படங்கள். தகவல்கள் சிறப்பு. தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. ஹையோ படங்கள் செமையா இருக்கு அனு. என்ன கலை நுட்பம்...நீங்க எடுத்திருப்பதும் கண்களைக் கவர்கிறது. சூப்பர் அனு...செம தெளிவா இருக்கு

    கீதா
    கீதா

    ReplyDelete