02 June 2020

பத்தாம் நாள் - மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்


மதுரை சித்திரைத்  திருவிழா ....

இரண்டாம் நாள் - பூத வாகனம், அன்ன வாகனம்..

மூன்றாம் நாள் -கைலாசபர்வதம் , காமதேனு வாகன உலா..

நான்காம் நாள் தங்க பல்லாக்கு...

ஐந்தாம் நாள் -வேடர்பறிலீலை, தங்கக்  குதிரை வாகன உலா

ஆறாம் நாள் ரிஷப வாகனத்தில்...

 ஏழாம் நாள் இறைவன் அதிகார நந்தி மீதும், அம்மன் யாளி வாகனத்திலும் ...

எட்டாம் நாள்  இரவு - மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

ஒன்பதாம் நாள் விழா -  மீனாட்சி அம்மன் திக்விஜயம் - இந்திர விமான உலா

 பத்தாம் நாள் அன்று காலை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ரிஷப லக்னத்தில் நடைபெறும்.





இவ்வருடம் நடைபெற்ற மீனாட்சி அம்மன் திருக்கல்யாண காட்சிகள் ...















பத்தாம் நாள் அன்று காலை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ரிஷப லக்னத்தில் நடைபெறும். முன்னதாக சுவாமி, பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் மூவரும் வெள்ளி சிம்மாசனத்தில் அதிகாலையில்  நான்கு சித்திரை வீதிகள் சுற்றி வந்து, முத்துராமைய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடி, பின்னர் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளுவர்.


திருப்பரங்குன்றத்தில் உள்ள சடங்கு கந்தரும், பவளக்கனிவாய்ப் பெருமாளும் திருக்கல்யாணத்திற்காக எழுந்தருளுவர்.


 மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான கல்யாண மண்டபத்திற்கு சுவாமி, பிரியாவிடை அம்மன் , மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளுவர்.


திருக்கல்யாணத்தன்று மட்டும் சுவாமிக்கு திருஷ்டி பொட்டு வைக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் குலசேகர பட்டர் வழிச் சிவாச்சாரியார் சுந்தரேஸ்வரராகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழிச் சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேடம் பூண்டு கல்யாணத்தை நடத்துவர்.

மீனாட்சி அம்மன் சார்பாக உள்ள சிவாச்சாரியார் சுவாமிக்கு பாதபூஜை செய்வார்.

பின்னர், காப்பு கட்டிய பட்டர் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்யம், கலசபூஜைகள் செய்வார். கலசபூஜையில் விநாயகர், பிரம்மா, மகாவிஷ்ணு, சோமன், உமாமகேஸ்வரி தங்குவதாக ஐதீகம். பின்னர், பாலிய பூஜை, ஹோமம், மாங்கல்ய பூஜை போன்றவை நடைபெறும். பின்னர், சுவாமி, பிரியாவிடை, அம்பாளுக்கு காப்புக் கட்டுதல் நடைபெறும். சுவாமி, அம்பாள் 3 முறை மாலை மாற்றிக் கொள்வர். தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெறும்.


சித்திரை திருவிழா 10ம் நாளில் திருமணம் முடிந்த அன்னை மீனாட்சி பூப்பல்லக்கிலும், சுந்தரேசுவரர் சுவாமி வெள்ளை யானையில் மதுரை மாசி வீதிகளில் வலம்  வருவர்.




போன வருடம்  நடைபெற்ற அன்னை மீனாட்சி பூப்பல்லக்கு மற்றும்  சுந்தரேசுவரர் சுவாமியின் வெள்ளை யானை உலா காட்சிகள்  .....











திருவிழாத் தத்துவமும் பலனும்  


         பத்தாம் நாள் திருக்கல்யாண திருவிழா மக்கள் புணர்வுறு போகம் மூழ்க இறைவன் புருடனும் பெண்ணுமாகித்  திருமணம் கொண்டு ஆற்றுப்படுத்தலைக் குறிப்பதாகும். இறைவனும் இறைவியும் புரிந்து கொள்ளும் கல்யாணம் திருக்கல்யாணம் எனப்படும்.

போகியாயிருந்து உயிர்களுக்குப் போகத்தைப் புரிகின்றான். இறைவன் போக வடிவில் வாழமற் போனால் உலகத்து உயிர்கள் அனைத்தும் போகியாய் வாழ இயலாது. ஆதலின் , இறைவன் திருக்கல்யாணம் புரிவது நம் பொருட்டேயாகும்.


பத்தாம் நாள் இரவு யானை வாகனத்தின் மீது இறைவன் ஏறி எழுந்தருள்கிறான். இது இலயக்கிரம சிருட்டிக்  கோலமாகும். இலயக்கிரமம் என்பதற்கு ஒடுங்கும் முறை என்பது பொருள். உலகப் பொருள்கள் அனைத்தும் இறைவனிடம் ஒடுங்கி ஒரே பிண்டமான யானையின் உடம்பு போல் பருமனாய்க்  கிடந்து ஒடுங்குதலாகும். அதிலிருந்து திரும்பவும் தோன்றுவது இலயத்தின் பின் சிருட்டி தொடங்குவதைக் குறிக்கும்.



திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகம்



2.66 - மந்திரமாவது நீறு 

மாலொடு அயனறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே. 9

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே. 10


ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச்


சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 11

மதுரை சித்திரைத்   திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்

8 comments:

  1. கண் குளிரப் படங்கள்...

    அன்னையின் அருளால் அகிலம் நலம் பெறட்டும்..

    ReplyDelete
    Replies
    1. அன்னை அருள் புரிவாள் ...

      Delete
  2. அம்மையும் அப்பனும் உலகத்தார் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

    அழகான படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக அன்னை அருள் புரிவாள் ...

      Delete
  3. திருமணத்தை தொலைக்காட்சியில் நேரடியாக காட்டினார்கள் கண்டு களித்தோம்.
    இங்கு உங்கள் தளத்தில் படங்களை தரிசனம் செய்து கொண்டேன்.
    அருமையான படங்கள்.
    திருவிழா தத்துவம்,பலன்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் இந்த வருடம் தொலைக்காட்சியில் கண்டு தரிசித்தோம் மா ...

      Delete
  4. மனதுக்கு நிறைவாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. மிக மகிழ்ச்சி மா ...

      Delete