10 June 2020

பன்னிரெண்டாம் நாள் - இந்திரன் சாப விமோசனம் , ரிஷப வாகன உலா

நிறைவு நாளில்.................


மதுரை சித்திரைத்  திருவிழா ....

இரண்டாம் நாள் - பூத வாகனம், அன்ன வாகனம்..

மூன்றாம் நாள் -கைலாசபர்வதம் , காமதேனு வாகன உலா..

நான்காம் நாள் தங்க பல்லாக்கு...

ஐந்தாம் நாள் -வேடர்பறிலீலை, தங்கக்  குதிரை வாகன உலா

ஆறாம் நாள் ரிஷப வாகனத்தில்...

 ஏழாம் நாள் இறைவன் அதிகார நந்தி மீதும், அம்மன் யாளி வாகனத்திலும் ...

எட்டாம் நாள்  இரவு - மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

ஒன்பதாம் நாள் விழா -  மீனாட்சி அம்மன் திக்விஜயம் - இந்திர விமான உலா




நிறைவு நாளில் இந்திரன் சாப விமோசனம் பெற்ற திருவிளையாடற்புராண நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின்னர் உச்சி காலத்தில் கொடியிறக்கித் தீர்த்தத் திருவிழாவுடன் விழா நிறைவடையும். 


அன்று இரவு 7 மணிக்கு சுவாமி, பிரியாவிடை ரிஷப வாகனத்திலும் மற்றும்  மீனாட்சி அம்மனும்  ரிஷப வாகனத்தில்  எழுந்தருளி, நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் புரிவர். 

இரவு 9 மணிக்கு மீனாட்சி கல்யாணத்திற்கு வந்திருந்த திருப்பரங்குன்றம் சடங்குக் கந்தரும், பவளக்கனிவாய் பெருமாளும் விடைபெற்றுக் கொண்டு, திருப்பரங்குன்றம் செல்வர். 

கோயில் தேவஸ்தானம் சார்பாக அவர்களுக்குப் பட்டு வஸ்திரம் அணிவிக்கப்படும்.


























திருவிழாத் தத்துவமும் பலனும்  

பன்னிரண்டாம் நாள் திருவிழா தீர்த்தத் திருவிழா சிவானந்தமாகிய பேரின்பக் கடலில் ஆன்மா திளைப்பதைக் குறிக்கும் . பொங்கித்ததும்பிப் பூர்ணமாய் ஏக உருவாய்க்கிடக்கும் இறையின்ப வாரியில் ஆன்மாக்கள் முற்றும் ஆழ்ந்து ஆனந்திப்பதைத் தீர்த்தவாரி குறிக்கின்றது. இதனை மகாருத்ரபாத தீர்த்தம் என்பர் . இரவு விருஷபவாகன சேவை மிகவும் முக்கியமானது. அடியார்களுக்கு ஆண்டவன் அருள்புரிய விருஷபவாகனத்தில் எழுந்தருளி வருவதை புராணாதிகளால் நன்கறியலாம் . அருள் பெற்ற ஆன்மா விருஷபமாகும். அதன் வெள்ளைநிறம் அதனிடத்து எவ்வித மாகம் இல்லை, என்பதை உணர்த்தும். தர்மம் என்ற அறத்தையே நான்கு கால்களாகக் கொண்டுள்ளது . சமம், விசாரம் , சந்தோஷம் , சாதுங்கம் என்ற நான்கு அறங்களும் நான்கு கால்களாய் அமைத்துள்ளன .

மாசற்ற அறவடிவமான ஆன்மாகளிடத்து இறைவன் வந்து அமர்வான் என்பதை இது குறிக்கின்றது . இது அனுக்கிரகக் கோலம்.




தேவாரப் பதிகங்கள் - 
3.052.திருஆலவாய் - திருவிராகம்


பட்டிசைந்த வல்குலாள் பாவையாளோர் பாகமா
ஒட்டிசைந்த தன்றியும் முச்சியாளொ ருத்தியாக்
கொட்டிசைந்த வாடலாய் கூடலால வாயிலாய்
எட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையே.

பட்டாடை அணிந்த திருமேனியுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகப் பிரியாவண்ணம் கொண்டதோடு , சடைமுடியின் உச்சியில் கங்கா தேவியையும் தாங்கியவரே ! கொட்டு என்னும் பறை முழங்க ஆடுபவரே ! கூடல் ஆலவாயில் வீற்றிருந்து அருள்பவரே ! அட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபெருமானே ! உம் அருள்தன்மை எம்மால் எடுத்தியம்ப வல்லதோ .



தொடர்ந்து பன்னிரண்டு  நாட்கள் இந்த சித்திரை திருவிழாவின் காட்சிகளையும் , தத்துவங்களையும் கண்டும், படித்தும் ரசித்தோம் ....

இத்திருவிழாவின் செய்திகளை கண்ட  பொழுது மேலும் அறிந்துக் கொள்ளும் ஆர்வம் வந்தது ... அதற்காக பல இடங்களில் தேடியே இந்த தகவல்களையும் படங்களையும் சேகரித்தேன்.

 அதை ஒரு சேமிப்பாகவும் , மேலும்  அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கும் பகிர்ந்தேன் ....கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்து இருக்கும் என நம்புகிறேன் ....

தொடர்ந்து வாசித்து  கருத்துக்கள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள் பல ....

சரி போதும் என எண்ணும்  போது  இன்னும் அழகர் வருகையின் தகவல்களை வாசிக்கும்  எண்ணம் வருவதால் இன்னும் சில பதிவுகள் அழகருடன் தொடரும் ...



மதுரை சித்திரைத்   திருவிழாவின் முந்தைய வருட படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. பன்னிரெண்டாம் நாள் திருவிழா.... தகவல்கள் அனைத்தும் சிறப்பு. அழகர் பற்றிய தகவல்கள் தொடர இருப்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. தொடர் கருத்துரைகளுக்கு நன்றி வெங்கட் சார் ...

      Delete
  2. சித்திரை திருவிழாவின் காட்சிகளை சிறப்பாக தொகுத்து வந்துள்ளீர்கள். படித்து மகிழ்ந்தோம்.

    ReplyDelete