08 December 2020

யானை சவாரி...

  வாழ்க வளமுடன் ...

கோழிக்கமுத்தி முகாம் கண்டு திரும்பும்  போது, அங்கு  டாப்சிலிப் யானை சவாரி தாயராக  இருந்தது .


கோழிக்கமுத்தி முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளில் 2 யானைகள் சுழற்சி முறையில் நாள்தோறும் டாப்சிலிப்பிற்கு அழைத்து வரப்படும். அங்கு காலை முதல் மாலை வரை அந்த யானைகளை கொண்டு வனத்திற்குள் சவாரி நடத்தப்பட்டு வருகிறது.




முந்தைய பதிவுகள் 


10.மீண்டும் சவாரி ....

11.கோழிக்கமுத்தி யானைகள் முகாம், டாப்ஸ்லிப்







நாங்கள் இங்கு வரும் பொழுதே, கொஞ்சம் கூட்டமாக இருந்தது . அதனால் சவாரிக்கு செல்லாமல் சிறிது நேரம் நின்று ரசித்துவிட்டு திரும்பிவிட்டோம் ..




ஆனைமலைத் தொடர்களில் வசித்து வரும் மலசர் பழங்குடியினர் இங்கு யானைகளுக்கு பயிற்சி அளிக்கின்றார்கள்.  பொதுவாக தமிழகத்தில் இருக்கும் கோவில் யானைகளின் பாகன்களாக இவ்வின மக்களே இருக்கின்றனர். இவர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான பந்தம் என்பது ஆதி தொட்டே இருக்கிறது. 

 இதே பகுதியில் வாழும் புலையர் இன மக்களும் யானை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடக வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தவும் இம்மக்கள், ஆனைமலை வனச்சரகத்தில் இருந்து அனுப்பப்படுகின்றனர்.













இங்கு சவாரியை கண்டு ரசித்தப்பின், நாங்கள்  பொள்ளாச்சியை நோக்கி பயணத்தை மேற்கொண்டோம் ....



அடுத்த பதிவில் தொடரும் ...

தொடரும்...

அன்புடன் 

அனுபிரேம் 




3 comments:

  1. படங்கள் அருமை.

    தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. படங்கள் அழகு.

    நானும் தாய்லாந்தில் யானைச் சவாரி செய்திருக்கிறேன்.

    ஆனாலும், அதுவும் பாவம்தான் (அதாவது சவாரி செய்வது). யானை என்ற ஆகிருதியான விலங்கை, நம்மைச் சுமக்குமாறு செய்தது மனதில் வருத்தம்தான்.

    ReplyDelete
  3. படங்கள் நன்று.

    யானைச் சவாரி - நான் அசாம் மாநிலத்தின் காசிரங்காவில் செய்திருக்கிறேன். நெல்லைத் தமிழன் சொல்வது போல யானைகளைக் கஷ்டப்படுத்துவது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்.

    ReplyDelete