26 June 2020

படகில் - ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம்....


வாழ்க வளமுடன் ....







முந்தைய பதிவுகள் ...

1.குடகு  மலை காற்றில் 
2. கும்பஜ்...
3.திப்புவின் கோடை கால மாளிகை...
4.நம்ட்ரோலிங் - தங்கக்கோயில்
5.தங்கக்கோயில் -பைலகுப்பே
6.காவேரி  நிசர்காதமா
7. ஒரு அழகிய தீவு .... நிசர்காதமா
8.செல்லும் வழியில்
9.தலைக்காவேரியிலிருந்து ...
10.பிரம்மகிரி மலைத் தொடர் ...
11.பாகமண்டலேஸ்வரா கோவில்




போன பதிவில் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் உள்ளே சென்றோம் ....இன்று அங்கு  படகில் பயணம் ...






படகை மெதுவாக செலுத்தி, நாம்  பறவைகளை ரசிக்கும் படி ...இந்த படகை செலுத்துகிறார்கள் ....

நாங்கள் சென்றது மாலை  நேரம் ஆதலால் பறவைகள் பல இங்கும் அங்கும் பறந்தும் , ஒலி  எழுப்பிக் கொண்டும் இருந்தன ...அழகிய காட்சிகள் அவை ..















பல வகையான பெரிய பெரிய  பறவைகளை இங்கு காண முடிக்கிறது .....









நடுவில் தீவு போன்ற அமைப்பில்  நிறைய பறவைகள் அமர்ந்து இருந்தன ...













பலர் பெரிய பெரிய கேமரா கொண்டு படம் பிடித்தனர் ...

என்னுடைய காட்சிகள் எல்லாம் மொபைல் கிளிக்ஸ் என்பதால் பறவைகளின் அழகை தனி தனியாக எடுக்க முடியவில்லை ...

எடுத்தாலும் துல்லியமாக இல்லை ...ஆனாலும்  பெரிய கேமரா கொண்டு  பறவைகளை   காட்சிப்படுத்தும் ஆசை மனதில் மிக அதிகமாக வரும் அளவு அங்கு பல அற்புத காட்சிகள் இருந்தன ...





 


படகு அந்த இடத்தை சுற்றி வரும் போது  நடுவில் அது என்ன  கல்லு தானே (கடைசி படம் )....ஆனால் மற்றவர்களின் பார்வை அப்படி இல்லை ...அப்படி என்றால் அது என்ன ....

அடுத்த பதிவில் சுவாரஸ்யமாக அது என்னவென்று  காணலாம் ...


தொடரும் ...

அன்புடன்,
அனுபிரேம்



6 comments:

  1. அழகான காட்சிகள். காணொளியும் கண்டு ரசித்தேன்.

    ReplyDelete
  2. இயற்கையான இடத்தின் படங்கள் மிக அழகு

    ஒரு தடவை சென்றாலே மனதில் புத்துணர்ச்சி உண்டாகிவிடும்.

    ReplyDelete
  3. திட்டில் முதலை ரொம்ப பெரிதாக இருக்கு.

    முன்பு, ஹொகேனகல் பரிசலில் ஒரு ஃபேமிலி சென்றுகொண்டிருந்தபோது, பையன் தண்ணீரில் கையை அளைந்தான் என்றும், முதலை பையனைக் கவ்வி விட்டது, மற்றவர்கள் உயிர் பிழைத்ததே பெரும்பாடு என்று சொன்னார்கள் (90ல்)

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு. 15 ஆண்டுகளுக்கு முன் சென்ற இடம். அதன் பிறகு பலமுறை மைசூர் சென்றோம் ஆயினும் நேரமின்மையால் இங்கு போக முடியவில்லை. புகைப்படங்கள் எடுப்பதற்காகவே போகும் ஆசை உள்ளது.

    ReplyDelete
  5. படங்களும் காட்சிகளும் அருமை, குளுமை .

    கண்டிப்பாக அது கல்லாக இல்லை என்றாலும் முதலையாக இருக்க வாய்ப்பே இல்லை. சுற்றுலா தளம் என்பதால் முதலைகள் இருக்காது என்றே கருதுகிறேன்.

    கொடைக்கானல் ஏரியில் கூட முதலை , நீரில் கையை விட்டவரின் கையை கவ்வியதாக ஒரு செய்தி இருக்கின்றது ஆனால் அது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

    ReplyDelete
  6. அழகானகாட்சிகள். பறவைகள் நிறைய்ய இருக்கின்றன போல. திட்டில் முதலை இருக்கே. அதை பற்றிய சுவாரஸ்ய தகவலா? படங்களை அழகாதான் நீங்க எடுத்திருக்கிறீங்க அனு.

    ReplyDelete