இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...
பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள் இரவு பேரிதாளம் ருக்மினி சத்யபாமா சமேதராய் கல்யாண திருக்கோலம் கொடிச்சப்பரம்..
பங்குனி பிரமோத்ஸவம் இரண்டாம் திருநாள்
காலை ---- தங்க பல்லக்கில்
(முக நூலில் இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும் நன்றி)
பெரியாழ்வார் திருமொழி
மூன்றாம்பத்து
ஒன்பதாம் திருமொழி - என் நாதன்
சாராம்சம் -
பெரியாழ்வார் தம்மையே இரண்டு பெண் தோழிகளாக பாவித்து,
ஒருத்தி கண்ணனின் குணங்களையும்,
மற்றொருத்தி ராமனின் குணங்களையும் போற்றி
பரவசமடைந்து குதித்து விளையாடுவது போல்
(பாடிப் பற) தமது அபார கற்பனைத் திறத்தோடு
இப்பாசுரங்களை அமைத்துளளார். கண்ணனை பற்றி
ஒரு பாசுரமும், ராமனைப் பற்றி ஒரு பாசுரமுமாக
மாறி மாறி ரசனையோடு அனுபவிக்கிறார்!
க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இரண்டு தோழியர் உந்திபறித்தல்
என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன் * நாதன் காணவே தண்பூ மரத்தினை *
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட *
என் நாதன் வன்மையைப் பாடிப் பற!
எம்பிரான் வன்மையைப் பாடிப் பற. (2)
பாசுர அனுபவம் -
முன்பொரு சமயம் என்னுடைய தலைவனின் (கண்ணன்) தேவி சத்யபாமை விரும்பிய
கற்பகப்பூவை, கொட மறுத்தாள் இந்திராணி;
அவள் கணவன் இந்திரன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே,
வேத வடிவாம் கருடனோடு கூட,
பலத்துடன் குளிர்ந்த பூவுடைய அம்மரத்தையே பிடுங்கி
தேவியின் முற்றத்தில் நட்டான்.
என் ஸ்வாமியின் பேராற்றலைப் பாடி விளையாடு!
எம்பெருமானின் பராக்கிரமத்தைப் போற்றி விளையாடு!
ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!
தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம் 💗💗
அனுபிரேம் 💗💗
அலங்காரம் பிரமாதம் என்றால் படங்கள் செம. தெளிவு.
ReplyDeleteகீதா
படங்கள் அனைத்தும் நன்று.
ReplyDelete