24 April 2022

பதினெட்டாம் திருநாள் ---இரவு ருக்மணி சத்யபாமா சமேதராய் புஷ்பயாகம் ஸப்தாவர்ணம்

  இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...

 



பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள், 

 இரண்டாம் நாள் - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

 மூன்றாம் திருநாள்  இரவு  - இராஜ அலங்காரத்திலும் ,

 நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்திலும்  ...

 ஐந்தாம் திருநாள்  -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் மரவூரி இராமர் திருக்கோலம்....

 ஆறாம் திருநாள் -  கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....

 ஏழாம் திருநாள்  ---இரவு புஷ்ப பல்லக்கில்  இராஜ அலங்காரம்

 எட்டாம் திருநாள்   --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில் 

ஒன்பதாம் திருநாள் - சிம்ம வாகனம் இராஜ அலங்காரத்தில் 

பத்தாம் திருநாள் - கிளி கண்ணன் திருக்கோலம் மற்றும்  வேணுகோபாலன் திருக்கோலம் 

பதினொன்றாம் திருநாள்  --- இரவு வெள்ளி சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலத்தில்  

பன்னிரென்டாம் திருநாள் ---காலை தங்க பல்லக்கு வைரமுடி சேவை, இரவு தங்க கருட சேவை 

பதிமூன்றாம் திருநாள் ...

காலை  ---- தங்க பல்லக்கு காளிங்கநர்த்தனத்தில் ,

மாலை  ---  ஆண்டாள் திருக்கோலம் ,  

இரவு   ---  வெள்ளி ஹனுமந்த வாகனம் இராமர் திருக்கோலம்...

பதினான்காம் திருநாள்  ----  இரவு யானை வாகனம் இராஜ அலங்காரத்தில் 

 பதினைந்தாம் திருநாள் --  காலை ருக்மணி, சத்யபாமா சமேதராய் பள்ளியறை சேவை கிருஷ்ணர்  திருக்கோலம்

பதினாறாம் திருநாள் --- காலை வெண்ணைத்தாழி நவநீத சேவை

பதினாறாம் திருநாள் --- காலை வெண்ணைத்தாழி நவநீத சேவை

பதினாறாம் திருநாள் --- மாலை வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி அலங்காரம் 

 பதினெட்டாம் திருநாள்  ---இரவு ருக்மணி  சத்யபாமா சமேதராய் புஷ்பயாகம் ஸப்தாவர்ணம்



















(முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)


பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து 

பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்

இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, 
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் 
கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்


மான் அமரு மெல் நோக்கி! வைதேவீ! விண்ணப்பம் *

கான் அமரும் கல் அதர் போய்க் காடு உறைந்த காலத்து *

தேன் அமரும் பொழிற் சாரல் சித்திரகூடத்து இருப்ப *

பால்மொழியாய்! பரத நம்பி பணிந்ததும்ஓர் அடையாளம்.


5 322



மானைப் போன்று மிருதுவான விழிகளை உடையவளே! 
பால் போன்ற சொல்லுடையாளே! 
பணிவோடு தெரிவிக்கிறேன்! 
கற்கள் நிறைந்த வழியாக காட்டிற்க்குள் சென்று அங்கு வசித்த
சமயம், தேன் வண்டுகள் மொய்க்கும் 
சோலைகளுடன் விளங்கிய சித்திர கூட மலையில்
நீங்கள் தங்கியிருந்த போது, பரதன்
அங்கு வந்து வணங்கியதை ஓர் 
அடையாளமாகக் கொள்ளவேணும்.


ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம் 💗💗

3 comments:

  1. படங்கள் அழகு.

    துளசிதரன்

    ReplyDelete
  2. ஆஹா ஆஞ்சு கணையாழி கொடுக்கும் பாடல்!! சொற் செல்வன்!! படங்கள் அலங்காரம் அழகு

    கீதா

    ReplyDelete
  3. படங்கள் அனைத்தும் அழகு. ரசித்தேன்.

    ReplyDelete