இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...
பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள்,
இரண்டாம் நாள் - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்
மூன்றாம் திருநாள் இரவு - இராஜ அலங்காரத்திலும் ,
நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ க்ருஷ்ண அலங்காரத்திலும் ...
ஐந்தாம் திருநாள் -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் மரவூரி இராமர் திருக்கோலம்....
ஆறாம் திருநாள் - கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....
ஏழாம் திருநாள் ---இரவு புஷ்ப பல்லக்கில் இராஜ அலங்காரம்
எட்டாம் திருநாள் --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில்
ஒன்பதாம் திருநாள் - சிம்ம வாகனம் இராஜ அலங்காரத்தில்
பத்தாம் திருநாள் - கிளி கண்ணன் திருக்கோலம் மற்றும் வேணுகோபாலன் திருக்கோலம்
பதினொன்றாம் திருநாள் --- இரவு வெள்ளி சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலத்தில்
பன்னிரென்டாம் திருநாள் ---காலை தங்க பல்லக்கு வைரமுடி சேவை, இரவு தங்க கருட சேவை
காலை ---- தங்க பல்லக்கு காளிங்கநர்த்தனத்தில் ,
மாலை --- ஆண்டாள் திருக்கோலம் ,
இரவு --- வெள்ளி ஹனுமந்த வாகனம் இராமர் திருக்கோலம்...
பதினான்காம் திருநாள் ---- இரவு யானை வாகனம் இராஜ அலங்காரத்தில்
பதினைந்தாம் திருநாள் -- காலை ருக்மணி, சத்யபாமா சமேதராய் பள்ளியறை சேவை கிருஷ்ணர் திருக்கோலம்
பதினாறாம் திருநாள் --- காலை வெண்ணைத்தாழி நவநீத சேவை
திவ்ய தேசங்களில் நடக்கும் வெண்ணெய்த் தாழி உற்சவத்தில், கண்ணபிரான் ஒரு குடத்தில், நிறைந்துள்ள வெண்ணெயை கையில் அளாவிக் கொண்டிருப்பார்.
ஆனால் இங்கு, வெண்ணெய்த் தாழியோடு, பல்லக்கில் தவழ்ந்த கோலத்தில் "விருந்தாவனத்தில் கண்ட வீதியார வருவானான" ஶ்ரீவித்யா ராஜகோபாலனுக்கு வெண்ணெயில் ஐந்து மணி நேரம் திருமஞ்சனம் ( குளியல்) நடைபெறுகிறது.
நன்றாகத் தவழ்ந்து,
தாழியில் உள்ள/அவர் மேல் வீசி சமர்ப்பிக்கப்படும் வெண்ணெயை அளாவுகிறார்.
சந்நிதியில் இருந்து புறப்பட்டு ரத வீதிகளில் வலம் வந்து ஆஸ்தானம் சேரும் வரை பக்தர்கள் வெண்ணெய் வீசிக் கொண்டே இருக்கிறார்கள்.
சந்நிதியில் புறப்படும் போதே நன்றாக வெண்ணெய் பூசி வருகிறார்.... வரும் வழியெங்கும் வெண்ணெய் வீச்சு.....சுமார் 200 கிலோ வெண்ணெய் வீசியிருப்பார்கள்.(ஒரு வெற்றிலையில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய் பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள்).
அவர் மேல் வீசப்படும் வெண்ணெயை, அர்ச்சகர் அவருக்கு நன்றாகப் பூசிவிட்டு, எடுத்து அனைவருக்கும் பிரசாதமாகத் தந்து கொண்டே இருந்தார்.
அன்று மன்னார்குடி, சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் கோபியர்களாக மாறி விட்டனரோ என்னும்படி மக்கள் வெள்ளம்.... வெண்ணெய் வெள்ளம்....
பெரியாழ்வார் திருமொழி
மூன்றாம்பத்து
பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்
இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு,
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக்
கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்
அல்லியம் பூ மலர்க்கோதாய்! அடிபணிந்தேன் விண்ணப்பம் *
சொல்லுகேன் கேட்டு அருளாய், துணைமலர்க்கண் மடமானே! *
எல்லியம்போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இடவகையில் *
மல்லிகைமாமாலை கொண்டு அங்குஆர்த்ததும் ஓர் அடையாளம்.
2 319
அனுபிரேம் 💗💗
சிறப்பான தகவல்கள். எத்தனை எத்தனை கொண்டாட்டங்கள்..... ரசித்தேன்.
ReplyDelete