25 April 2022

ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி ஆண்டாள் திருக்கோலம் ..

 இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம் நிகழ்ச்சிகளுக்கு அடுத்து பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி...


 பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி முதல் திருநாள் மாலை  ஹரித்ராநதி வடகரை சேதுபாவா சத்திரத்தில் ஆண்டாள் திருக்கோலம்...










பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி முதல் திருநாள் இரவு ஹரித்ராநதி வடகரை சேதுபாவா சத்திரத்திலிருந்து திரும்புகால் புறப்பாடு ------ பல்லக்கு இராமர் திருக்கோலம்







பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி இரண்டாம் திருநாள் இரவு  ---- ராயர் தோட்டத்தில் க்ருஷ்ண திருக்கோலம்



















(முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)


பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து 

பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்

இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, 
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் 
கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்



சித்திரகூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட *

அத்திரமே கொண்டு எறிய, அனைத்து உலகும்திரிந்து ஓடி *

வித்தகனே! இராமாவோ! நின் அபயம் என்று அழைப்ப *

அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம்.

6 323



சித்திரக்கூட மலையில் நீங்கள் உல்லாசமாக இருக்கையில், 
சிறிய காக்கை வடிவில் வந்த அசுரன்  உங்களது  மார்பகத்தை தீண்ட, 
அந்தக்  க்ஷணமே ராமன் ப்ரஹ்மாஸ்த்திரத்தை
அக்காக்கையின் மீது ஏவிவிட, அது,  தனதுயிரை 
காத்துக்கொள்ள உலகமனைத்திலும் திரிந்து ஓட,
கடைசியில் தப்பிக்க முடியாமல், வல்லவனான ராமனிடம் வந்து,
 ராமா! நீயே எனக்கு அடைக்கலம் என்று கதற,
 அந்த அஸ்த்திரத்தாலேயே காகத்தின்
 ஒரு கண்ணை மட்டும் அறுத்தது 
ஓர் அடையாளமாகக் கொள்ள வேணும்.


ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம் 💗💗

1 comment:

  1. அழகான படங்களை கண்டு மகிழ்ந்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete