பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி மூன்றாம் திருநாள் புறப்பாடு...
பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி ஆறாம் திருநாள் புறப்பாடு ...
பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி ஏழாம் திருநாள் புறப்பாடு...
பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி எட்டாம் திருநாள் புறப்பாடு...
பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி எட்டாம் திருநாள் புறப்பாடு...
(முக நூலில் இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும் நன்றி)
பெரியாழ்வார் திருமொழி
மூன்றாம்பத்து
பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்
இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு,
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக்
கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்
மைத்தகு மா மலர்க் குழலாய்! வைதேவீ! விண்ணப்பம் *
ஒத்த புகழ் வானரக் கோன் உடன் இருந்து நினைத் தேட *
அத்தகு சீர்அயோத்தியர்கோன் அடையாளம் இவை மொழிந்தான் *
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே.
8 325
சிறந்த பூக்களால் அலங்கரிக்கப் பெற்ற மைபோன்ற
கரிய நிறம் கொண்ட கூந்தலை உடையவளே! வைதேஹியே!
நான் கூறுவதைக் கேட்டருளவேணும்.
பெருமானுக்கு சமமான புகழ் படைத்த சுக்ரீவனோடு சேர்ந்து,
அயோத்தியர்களின் தலைவன் ராமபிரான்
உன்னை தேடும் படி என்னை நியமித்து
இவ்வடையாளங்களை சொல்லி அனுப்பினான்.
அதோடுகூட அவன் திருக்கையிலணிந்திருந்த
இந்த மோதிரமும் ஓர் அடையாளமே.
ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!
தொடரும் ...
அன்புடன்
அனுபிரேம் 💗💗
அனுபிரேம் 💗💗
படங்கள் ஒவ்வொன்றும் அழகு. பார்த்து ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete