18 April 2022

பங்குனி பிரமோத்ஸவம் பதினான்காம் திருநாள் ---- இரவு யானை வாகனம் இராஜ அலங்காரத்தில் இராஜகோபாலசுவாமி...

 இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...





பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள், 

 இரண்டாம் நாள் - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

 மூன்றாம் திருநாள்  இரவு  - இராஜ அலங்காரத்திலும் ,

 நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்திலும்  ...

 ஐந்தாம் திருநாள்  -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் மரவூரி இராமர் திருக்கோலம்....

 ஆறாம் திருநாள் -  கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....

 ஏழாம் திருநாள்  ---இரவு புஷ்ப பல்லக்கில்  இராஜ அலங்காரம்

 எட்டாம் திருநாள்   --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில் 

ஒன்பதாம் திருநாள் - சிம்ம வாகனம் இராஜ அலங்காரத்தில் 

பத்தாம் திருநாள் - கிளி கண்ணன் திருக்கோலம் மற்றும்  வேணுகோபாலன் திருக்கோலம் 

பதினொன்றாம் திருநாள்  --- இரவு வெள்ளி சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலத்தில்  

பன்னிரென்டாம் திருநாள் ---காலை தங்க பல்லக்கு வைரமுடி சேவை, இரவு தங்க கருட சேவை 

பதிமூன்றாம் திருநாள் ...

காலை  ---- தங்க பல்லக்கு காளிங்கநர்த்தனத்தில் ,

மாலை  ---  ஆண்டாள் திருக்கோலம் ,  

இரவு   ---  வெள்ளி ஹனுமந்த வாகனம் இராமர் திருக்கோலம்...

பதினான்காம் திருநாள்  ----  இரவு யானை வாகனம் இராஜ அலங்காரத்தில் 
























 (முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)


பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து

ஒன்பதாம் திருமொழி - என் நாதன்


நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று

உந்தி பறந்த ஒளியிழையார்கள் சொல்

செந்தமிழ்த் தென் புதுவை விட்டுசித்தன் சொல்

ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே

11    317


நந்தகோபரின் மகன் கண்ணனையும், காகுத்தன் என்ற
ராமனையும் குறித்து, குதித்தும் விளையாடிக் கொண்டும்,
பள பளக்கும் ஆடையணிந்த இப்பெண்கள் சொல்லியதை,
ஸ்ரீவில்லிபுத்தூரின் பெரியாழ்வார், கண்ணன் விஷயமாக
ஐந்து பாசுரங்களும், ராமன் விஷயமாக ஐந்து
பாசுரங்களுமாக தூய தமிழில் அருளிச் செய்தவைகளை
கற்றுணர்ந்தவர்களுக்குத் துன்பமொன்றுமில்லை.




ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம் 💗💗

3 comments:

  1. அலங்காரங்கள் கண்களைக் கவரும் வகையில்..... அனைத்தும் ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  2. படங்கள் தெளிவாக இருக்கின்றன. அழகான கோணங்களிலும்.

    யானைவாகன யானையின் கண்ணும், பின்னழகும் தனியாக எடுத்திருப்பது புகைப்படம் எடுத்தவர் எவ்வளவு ரசித்து எடுத்திருக்கிறார் என்று தெரிகிறது! வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
  3. படங்கள் அனைத்தையும் ரசித்தேன்.

    துளசிதரன்

    ReplyDelete