19 April 2022

பதினைந்தாம் திருநாள் - ருக்மணி, சத்யபாமா சமேதராய் ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி

 இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...



பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள், 

 இரண்டாம் நாள் - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

 மூன்றாம் திருநாள்  இரவு  - இராஜ அலங்காரத்திலும் ,

 நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்திலும்  ...

 ஐந்தாம் திருநாள்  -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் மரவூரி இராமர் திருக்கோலம்....

 ஆறாம் திருநாள் -  கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....

 ஏழாம் திருநாள்  ---இரவு புஷ்ப பல்லக்கில்  இராஜ அலங்காரம்

 எட்டாம் திருநாள்   --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில் 

ஒன்பதாம் திருநாள் - சிம்ம வாகனம் இராஜ அலங்காரத்தில் 

பத்தாம் திருநாள் - கிளி கண்ணன் திருக்கோலம் மற்றும்  வேணுகோபாலன் திருக்கோலம் 

பதினொன்றாம் திருநாள்  --- இரவு வெள்ளி சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலத்தில்  

பன்னிரென்டாம் திருநாள் ---காலை தங்க பல்லக்கு வைரமுடி சேவை, இரவு தங்க கருட சேவை 

பதிமூன்றாம் திருநாள் ...

காலை  ---- தங்க பல்லக்கு காளிங்கநர்த்தனத்தில் ,

மாலை  ---  ஆண்டாள் திருக்கோலம் ,  

இரவு   ---  வெள்ளி ஹனுமந்த வாகனம் இராமர் திருக்கோலம்...

பதினான்காம் திருநாள்  ----  இரவு யானை வாகனம் இராஜ அலங்காரத்தில் 


 பதினைந்தாம் திருநாள் --  காலை ருக்மணி, சத்யபாமா சமேதராய் பள்ளியறை சேவை கிருஷ்ணர்  திருக்கோலம்..














மாலை --- ருக்மணி,  சத்யபாமா சமேதராய் கல்யாண அவசர திருக்கோலம் சூர்ணோத்ஸவம் கோரதம்















 (முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)


பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து 

பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்

இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, 
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் 
கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்


நெறிந்த கருங்குழல் மடவாய்! நின் அடியேன் விண்ணப்பம் *

செறிந்த மணிமுடிச் சனகன் சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது  

அறிந்து * அரசு களைகட்ட அருந்தவத்தோன் இடை விலங்க *

செறிந்த சிலைகொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம். (2)


1 318



அடர்ந்த கரிய, அழகிய கூந்தலையுடைய பிராட்டியே! 
 உன் அடியவனான நான் கூறும் ஒன்றைக் கேட்க வேண்டுகிறேன்:
உயர்ந்த கிரீடத்தை அணிந்த ஜனக மகாராஜாவினுடைய
வில்லை முறித்து உம்மை மணம் புரிந்த
ராமனுடைய பராக்கிரமத்தை அறிந்தவனாய்,
கடும் தவமுடையவனும், அரசர்களை பயிர்களின் களைகளை 
நீக்குவதுபோல் வெட்டி வீழ்த்தியவனுமான பரசுராமன் 
எதிர் கொண்டு வர,ராமபிரான் அவனது தனுஸ்ஸை வாங்கி
அத்துடன் அவனுடைய தபஸ்ஸின் பலத்தையும்
அபகரித்தது ஓர் அடையாளம்.




ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம் 💗💗

2 comments:

  1. அலங்காரமும் சுற்றும் அழகு.

    கீதா

    ReplyDelete
  2. காணக் கண் கோடி வேண்டும். தொடர்ந்து ரசித்து வருகிறேன்.

    ReplyDelete