11 April 2022

ஸ்ரீ இராம நாம மஹா மந்திரம்..

  ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ....    ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ...

ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ....


மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த இராமர் ஸ்ரீ இராம நவமி உற்சவத்தில்  ....











ஸ்ரீ இராம நாம மஹா மந்திரம்..

ஸ்ரீராம ராம ராமேதி ரமேராமே மனோரமே |

ஸகஸ்ரநாம தத்துஸ்யம் ஸ்ரீராமநாமவரானனே ||


என்ற ஸ்லோகம் விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதும் கூறி பெருமாளை வழிபட்ட பலன் இந்த இராமநாமத்தைக் கூறுவதாலேயே சித்திக்கும் என்பதை உணர்த்துகிறது.

திருமாலின் ஏழாவது அவதாரமான ஸ்ரீராமரின் திருப்பிறப்பு சித்திரை மாதம் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் நிகழ்ந்தது.

நடுப்பகலில் கோடை வெயிலில் ஸ்ரீஇராமர் அவதாரம் அயோத்தியில் நிகழ்ந்தது.

ஸ்ரீஇராமர் ஏற்றுக் கொண்ட வனவாசமும் (உஷ்ணத்திலேயே) பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்தது.

பரந்தாமனின் வெப்பத்தை ஆற்றும் பொருட்டே பக்தர்கள் ஸ்ரீஇராமநவமி நன்னாளில் பானகமும், நீர் மோரும் படைத்து மகிழ்கிறோம்.

மூலமந்திரமான ராமநாமத்தை எழுதியும், உச்சரித்தும், உருவேற்றியும் மகிழ்கிறார்கள்.

கங்கைக் கரையில் வேடுவன் குகன், கிஷ்கிந்தையில் குரங்கினத் தலைவன் சுக்ரீவன், இலங்கையில் அரக்கரினத்தைச் சேர்ந்த விபிஷணன், அனைவரையும் தம்பியராக ஸ்ரீஇராமர் ஏற்றுக் கொண்ட தனிப்பெரும் வரலாறுதானே இராமாயணம்….!








நவமியில் பிறந்த நாயகரான ஸ்ரீஇராமர் உபதேசம் மூலமாக தன் கொள்கைகளை விளக்காமல் உதாரண புருஷராக தானே வாழ்ந்து காட்டினார்.

ஒரு சொல், ஒருவில், ஒரு இல் என நம் தமிழ் அதை நயம்பட உரைக்கிறது.

‘பட்டாபிஷேகம்’ என்று ஸ்ரீஇராமர் பரவசப்படவில்லை.

‘வனவாசம்’ என்று ஸ்ரீஇராமர் வருத்தப்படவில்லை.

இன்பத்தையும், துன்பத்தையும் சமநோக்கில் எடுத்துக் கொண்டார். 

‘இன்றுபோய் போருக்கு நாளை வா’ என பகைவனுக்கும் கருணை காட்டினார்.

வானரங்கள், பறவை ஜடாயு, கரடி ஜாம்பவான், அணில், என ‘காக்கை, குருவி எங்கள் ஜாதி’ என்ற மேலான சமத்துவம் கடைப்பிடித்து வாழ்ந்த இதிகாச நாயகரே இராமர்.

ஸ்ரீஇராமநவமி வைபவத்தைக் கொண்டாடும் நாம், ஸ்ரீஇராமரை நம் குறிக்கோள் நாயகராகக் கொண்டால் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வநிலைக்கு உயரலாம் என்பது திண்ணம்!

எங்கெல்லாம் இராம நாமம் ஒலிக்கிறதோ, இராமரின் திருக்கதை எவ்விடங்களில் எல்லாம் சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் அழுத கண்ணும், தொழுத கையும் உடையவனாக அனுமன் நிற்கிறார் (விளங்குகிறார்).

இராமநாமம் கூறியே அனுமன் கடலைக் கடந்தான்.

ஆனால் மூலமந்திரத்திற்கு உரிய மூர்த்தியோ அணை கட்டி ‘சேது ராமனாக’ ஆகியே இலங்கை சென்றார்.






மூர்த்தியைவிட மூலமந்திர ஜபமே சாலச்சிறந்தது என்று கண்டு  ஞானிகள் அனைவரும் அப்பாதையில் தான் சென்றார்கள். 

திருமால் பக்தர்களின் எட்டெழுத்தும், சிவநேயச் செல்வர்களின் ஐந்தெழுத்தும் சேர்ந்தே ‘ராம’ என்ற இரண்டெழுத்து மந்திரம் உருவானது என்கிறார். ‘எவரநி’ என்று தொடங்கும் கீர்த்தனையில் தியாகராஜர்!

‘நாராயணாய’ மந்திரத்தில் ஜீவ அட்சரம் ‘ரா’ அவ்வெழுத்து இல்லையேல் ந அயனாய என்று ‘வழி காட்டாதவன்’ எனப் பொருள் மாறிவிடும்.

அவ்வாறே ‘நமசிவாய’ மந்திரத்தில் ஜீவ அட்சரம் ‘ம’ அவ்வெழுத்தை எடுத்துவிட்டால் ‘ந சிவாய’ என ‘மங்கலத்தை வழங்காதவன்’ எனப் பொருள்படும்.

ஆக இரு மூலமந்திரங்களிலும் உயிர் எழுத்தாக உள்ள ரா, ம என்ற இரண்டு எழுத்துகளும் இணைந்து ‘ராம’ என்ற அற்புதச் சொற்பதம் பிறந்தது. அதுவே நற்பதம் அருளும் என்கிறார் தியாகராஜர்.


ஸ்ரீஇராமர் என்ற பதமே பலருக்கும் பிடித்திருக்கிறது. அதனால் தான் கல்யாணராமன், சீதாராமன், ராஜாராமன், யக்ஞராமன், சந்தானராமன், ஜயராமன், சிவராமன் என்று அனந்தராமர் நாமங்கள்.


நமக்கு மட்டுமல்ல பெருமாளுக்கே அந்த நாமம் பிடித்திருப்பதால்தான் இது வரை எடுத்த ஒன்பது அவதாரங்களில் மூன்று அவதாரப் பெயர் பரசுராமர், ஸ்ரீராமர், பலராமர் என விளங்குகிறது.

(படித்ததில் பிடித்தது )









பெரிய திருமொழி

பத்தாம் பத்து

மூன்றாம் திருமொழி - ஏத்துகின்றோம்


                                                           இராமவதாரத்தில் ஈடுபாடு – 2


மாற்றம் ஆவது இத்தனையே, வம்மின், அரக்கர் உள்ளீர்! *

சீற்றம் நும்மேல் தீர வேண்டின்,  சேவகம் பேசாதே *

ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அநுமனை வாழ்க என்று *

கூற்றம்  அன்னார் காண ஆடீர் குழமணிதூரமே. 

7 1874


கவள யானை பாய் புரவி, தேரோடு அரக்கர் எல்லாம் 

துவள * வென்ற வென்றியாளன் தன் தமர் கொல்லாமே *

தவள மாடம் நீடு அயோத்தி காவலன் தன் சிறுவன் *

குவளை வண்ணன் காண ஆடீர் குழமணி தூரமே.

8 1875


ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல் எங்கள் இராவணனார் 

ஓடிப்போனார் * நாங்கள் எய்த்தோம், உய்வது  ஓர் காரணத்தால் *

சூடிப் போந்தோம் உங்கள் கோமன் ஆணை, தொடரேல்மின் *

கூடி கூடி ஆடுகின்றோம் குழமணி தூரமே. 

9 1876


வென்ற தொல் சீர்த் தென்இலங்கை வெம் சமத்து * அன்று அரக்கர் 

குன்றம் அன்னார் ஆடி உய்ந்த குழமணி தூரத்தை *

கன்றி நெய்ந்நீர் நின்ற வேல் கைக் கலியன் ஒலி மாலை *

ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்று  ஆடுமினே. (2) 

10 1877
















ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதா ராம்....
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !


அன்புடன் 
அனுபிரேம் 💖💖

2 comments:

  1. நன்று அனு...ஏரிகாத்த ராமர் கோயில் சென்றதுண்டு. அழகான கோயில்.

    கீதா

    ReplyDelete