28 April 2022

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி ஒன்பதாம் திருநாள் புறப்பாடு....

  பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி முதல் திருநாள் மாலை  ஹரித்ராநதி வடகரை சேதுபாவா சத்திரத்தில் ஆண்டாள் திருக்கோலம்...

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி மூன்றாம் திருநாள் புறப்பாடு...

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி ஆறாம் திருநாள் புறப்பாடு ...

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி ஒன்பதாம் திருநாள் புறப்பாடு....










பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி பத்தாம் திருநாள் புறப்பாடு....









பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி பதினொன்றாம் திருநாள் புறப்பாடு....





























 (முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)



பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து 

பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்


திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் *

மிக்க பெருஞ்சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு *

ஒக்குமால் அடையாளம், அனுமான்! என்று உச்சி மேல் 

வைத்துக் கொண்டு * உகந்தனளால் மலர்க் குழலாள் சீதையுமே. (2)


9 326


எல்லா திக்குகளிலும் நிறைந்த புகழை உடையவனான ராமன், 

ஒருசமயம் அக்னியால் யாகம் செய்யப்படும் மிகப் பெரிய யாகசாலைக்குச்
சென்று ருத்ர தனுஸ்ஸை முறித்தான். 
அன்று அவன் கையிலணிந்திருந்த அதே மோதிரத்தை இப்பொழுது
கண்டவுடன், அழகிய மலர்களை தன்னுடைய
கூந்தலில் சூட்டியிருந்த சீதா பிராட்டி, 
அனுமனை நோக்கி, "ஏ அனுமனே! நீ கூறிய அடையாளங்கள்
ஒத்துப் போகிறது! " என்று சொல்லிக் கொண்டே அந்த மோதிரத்தை தன்
தலைமீது வைத்து மகிழ்ந்தாள்.




ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம் 💗💗

3 comments:

  1. பெருமாளின் கால் பகுதியில் சந்தனமா அது? மேலே உள்ள படங்களில் ஒரு நிறம் கீழே உள்ள படங்களில் வேறு நிறத்தில் இருக்கிறது வித்தியாசமான அலங்காரமாகத் தெரிகிறது அனு!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமா அக்கா , சந்தனம் தான் இந்த விடையாற்றி உற்சவத்தில் இது போல அலங்காரம் செய்கிறார்கள்

      Delete
  2. சிறப்பான படங்கள். தொடரட்டும் திருவிழா சிறப்புப் படங்கள்.

    ReplyDelete