26 April 2022

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி மூன்றாம் திருநாள் புறப்பாடு...

 பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி முதல் திருநாள் மாலை  ஹரித்ராநதி வடகரை சேதுபாவா சத்திரத்தில் ஆண்டாள் திருக்கோலம்...

பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி மூன்றாம் திருநாள் புறப்பாடு...










பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி நான்காம் திருநாள் ஆண்டாள் திருக்கோலம் புறப்பாடு





















பங்குனி பிரமோத்ஸவம் விடையாற்றி ஐந்தாம் திருநாள் புறப்பாடு











(முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)


பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து 

பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்

இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, 
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் 
கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்


மின் ஒத்த நுண்ணிடையாய்! மெய் அடியேன்விண்ணப்பம் *

பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட *

நின் அன்பின்வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக *

பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம்.

7 324


மின்னலைப் போன்ற மெல்லிய இடையைக் கொண்டவளே! 
உனக்கு உண்மையாக அடி பணிந்த நான் கூறுவதைக் கேட்டருளவேணும்.
பொன் போன்ற நிறமுடைய ஒரு மான்,
நீ இருக்குமிடத்தில் புகுந்து இனிமையாகவிளையாடுகையில், 
உன் அன்பிற்க்கு இணங்க ராமன், 
வில்லை எடுத்தவனாய் அம்மானை பிடித்துக் வரப் போக, 
அப்பொழுது லக்ஷ்மணனும் பின் தொடர்ந்து, 
பிரிந்து சென்றது ஓர் அடையாளம்.


ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!

தொடரும் ...

அன்புடன்,
அனுபிரேம் 💗💗

1 comment:

  1. அனு படங்கள் அழகு. அலங்காரம் வாவ்!

    கீதா

    ReplyDelete