21 April 2022

பதினாறாம் திருநாள் --- மாலை வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி அலங்காரம்

  இராஜ மன்னார்குடி, ஸ்ரீ வித்யா இராஜகோபாலசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவம்...



பங்குனி பிரமோத்ஸவம் முதல் திருநாள், 

 இரண்டாம் நாள் - புன்னை வாகனம் கண்ணன் திருக்கோலத்தில்   

 மூன்றாம் திருநாள்  இரவு  - இராஜ அலங்காரத்திலும் ,

 நான்காம் திருநாள் - தங்க கோவர்த்தனகிரீ  க்ருஷ்ண அலங்காரத்திலும்  ...

 ஐந்தாம் திருநாள்  -- பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில் மரவூரி இராமர் திருக்கோலம்....

 ஆறாம் திருநாள் -  கண்ட பேரன்ட பஷி வாகனம் இராஜ அலங்காரத்தில் ....

 ஏழாம் திருநாள்  ---இரவு புஷ்ப பல்லக்கில்  இராஜ அலங்காரம்

 எட்டாம் திருநாள்   --- ரிஷியமுகபர்வதம் பட்டாபி இராமர் திருக்கோலத்தில் 

ஒன்பதாம் திருநாள் - சிம்ம வாகனம் இராஜ அலங்காரத்தில் 

பத்தாம் திருநாள் - கிளி கண்ணன் திருக்கோலம் மற்றும்  வேணுகோபாலன் திருக்கோலம் 

பதினொன்றாம் திருநாள்  --- இரவு வெள்ளி சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலத்தில்  

பன்னிரென்டாம் திருநாள் ---காலை தங்க பல்லக்கு வைரமுடி சேவை, இரவு தங்க கருட சேவை 

பதிமூன்றாம் திருநாள் ...

காலை  ---- தங்க பல்லக்கு காளிங்கநர்த்தனத்தில் ,

மாலை  ---  ஆண்டாள் திருக்கோலம் ,  

இரவு   ---  வெள்ளி ஹனுமந்த வாகனம் இராமர் திருக்கோலம்...

பதினான்காம் திருநாள்  ----  இரவு யானை வாகனம் இராஜ அலங்காரத்தில் 

 பதினைந்தாம் திருநாள் --  காலை ருக்மணி, சத்யபாமா சமேதராய் பள்ளியறை சேவை கிருஷ்ணர்  திருக்கோலம்

பதினாறாம் திருநாள் --- காலை வெண்ணைத்தாழி நவநீத சேவை

பதினாறாம் திருநாள் ----மாலை வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி அலங்காரம்


மன்னார்குடி கடைவீதி ஆஞ்சநேயர் கோவிலில், ஸ்ரீராஜகோபாலஸ்வாமிக்கு,
வெண்ணைய் களைந்து திருமஞ்சனம் நடைபெறும்,  பின் 4 மணி அளவில், இடுப்பில் சிறிய கச்சை அணிந்து கையில்  துலாக்கோலுடன் (தராசுடன்) "செட்டி அலங்காரம்"  . 

நாம் செய்யும் புண்ணிய பாபங்களை  தராசில் வைத்து சீர்தூக்கி  பார்த்து நம் பாபத்தின் பக்கம் கீழே இறங்காமல் நம்மைக் காத்து ரக்ஷிக்கிறார். இந்த நாளில் நாம் சேவித்தால் "பாவங்கள்" அழியும் புண்ணியம் பெருகும் என்கிறார்கள்.






















 பதினாறாம் திருநாள் இரவு ---- தங்க குதிரை வாகனத்தில்  இராஜ அலங்கார சேவை ...























(முக நூலில்  இவ்வழகிய படங்களை பகிர்ந்த பக்தர்கள் அனைவருக்கும்  நன்றி)


பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து 

பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்

இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, 
சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் 
கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்


கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட *

மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய *

குலக்குமரா! காடுறையப் போ என்று விடைகொடுப்ப *

இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம்.


3 320



மந்தரையினால் கலக்கப்பட்ட மனத்தையுடையவளான கைகேயி தசரதனிடம் 
வரத்தின் பயனை யாசித்தவுடன், அதைக் கேட்ட தசரத மன்னன்
கலக்கமுற்றவனாய் மறுத்து பேசாமலிருக்க, 
அந்த  சமயத்தை சாதகமாய் பயன்படுத்திய கைகேயி
ராமனை நோக்கி  "உயர் குலத்து மைந்தனே!
காட்டிலே வசித்துவிட்டு வா' என்று வழியனுப்ப,
லக்ஷ்மணனோடு கூட ராமன் காட்டைச்
சென்றடைந்ததும் ஓர் அடையாளம்.



ஸ்ரீ  வித்யா இராஜகோபால ஸ்வாமி திருவடிகளே சரணம் ... !!!


தொடரும் ...

அன்புடன்
அனுபிரேம் 💗💗

No comments:

Post a Comment