14 April 2022

'சுபகிருது' வருஷம்... புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்


நட்புக்கள் அனைவருக்கும்
இனிய 'சுபகிருது' வருஷ வாழ்த்துக்கள்....












தமிழ் வருடங்கள் அறுவதில்  சுபகிருது  36வது ஆண்டாக அமைந்துள்ளது. 

சுபகிருது என்பதற்கு நற்செய்கை என்று தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். 

அந்த அளவில் இந்த ஆண்டு பல்வேறு நற்செய்திகளைக் கொண்டுவரும் ஆண்டாக அமையும்.


சுபகிருது வருட வெண்பா பலன்-

 சுபகிருது புத்தாண்டு குறித்து சித்தர்பெருமான் இடைக்காடரின் வெண்பா கீழ்க்காணும்படி அமைகிறது.....


 சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்

 அவமாம் விலைகுறையு   மான்சாம் - சுபமாகும் 

 நாடெங்கு மாரிமிகு நல்லவிளை வுண்டாகுங் 

 கேடெங்கு மில்லையதிற் கேள்







வெண்பா பொருள்: 

சுபகிருது ஆண்டில் சோழநாட்டிலே சில பொருள்கள் வீணாகிப் பாழாகும். 

மான்களுக்கு நோய் தாக்கும்.

 மண்பாண்டங்களின் விலை குறையும். 

மழை நன்கு பெய்து விளைச்சல் உண்டாகும். 

மழையினால் வேறு எந்த கேடும் இல்லை' என்கிறது இந்த வெண்பா.










பெரிய திருமொழி - ஒன்பதாம் பத்து 

ஒன்பதாம் திருமொழி - மூவரில் 


1828

மூவரில் முன் முதல்வன், முழங்கு ஆர் கடலுள் கிடந்து * 

பூ வளர் உந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டுஉமிழ்ந்த * 

தேவர்கள் நாயகனைத் திருமாலிருஞ்சோலை நின்ற * 

கோவலர் கோவிந்தனை, கொடி ஏர் இடை கூடுங்கொலோ? (2)



1829

புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள் 

முனைவனை * மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னை * 

சினை வளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான் *

கனை கழல் காணுங்கொலோ? கயல் கண்ணி எம் காரிகையே. (2)


1830

உண்டு உலகு ஏழினையும், ஒரு பாலகன் ஆலிலை மேல் * 

கண் துயில் கொண்டு உகந்த கரு மாணிக்க மா மலையை * 

திண் திறல் மா கரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற * 

அண்டர் தம் கோவினை இன்று அணுகும்கொல்? என் ஆய்இழையே!


அனைவரும் எல்லா நலமும், வளமும், பெற்று

இந்த "சுபகிருது" ஆண்டில் மகிழ்வுடன் வாழ

எங்களது இனிய வாழ்த்துக்கள்  .....


மீனாட்சி அம்மன்  திருவடிகளே சரணம் ....





அன்புடன்
அனுபிரேம்


2 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துகள் அனு.

    படங்கள் அழகு. ஓ இந்த ஆண்டிற்கான பலன்களுமா....

    கீதா

    ReplyDelete
  2. விஷு மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள். இந்த ஆண்டில் நோய் நொடி இல்லாமல் எல்லோரும் மகிழ்வுடன் இருந்திட பிரார்த்திப்போம்.

    துளசிதரன்

    ReplyDelete