ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்
ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர உற்சவம்
2.இரண்டாம் திருநாள் - ருக்மணி கல்யாணம்
3.மூன்றாம் திருநாள் -- கண்ணன் ( வஸ்திராபஹரணம்) திருக்கோலம்
4. நான்காம் திருநாள் -- புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்) திருக்கோலத்தில் ...-
5.ஐந்தாம் திருநாள் பரமஸ்வாமி ( திருமாலிருஞ்சோலை) மற்றும் கள்ளழகர் திருக்கோலத்தில் ...
6. ஆறாம் திருநாள் ---ஶ்ரீஆண்டாள் கேசவ நம்பியின் கால் பிடித்தல்
7.ஏழாம் திருநாள் -- அரங்கன் திருக்கோலத்தில் ஶ்ரீஆண்டாள்
ஆடிப்பூரம் நன்னாள் ----
மூலவர் - ஶ்ரீஆண்டாள்
உற்சவர் - நாச்சியார் திருக்கோலம்
பத்தாம் பாசுரம் -- இதில் இப்பத்து பாசுரங்களைக் கற்றதற்குப் பலன் சொல்லி முடிக்கிறாள்.
513
கருப்பு வில் மலர்க் கணைக் காம வேளைக்
கழலிணை பணிந்து, அங்கு ஓர் கரி அலற
மருப்பினை ஒசித்துப் புள் வாய் பிளந்த
மணிவண்ணற்கு என்னை வகுத்து இடு என்று
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும்
புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை
விருப்பு உடை இன் தமிழ் மாலை வல்லார்
விண்ணவர் கோன் அடி நண்ணுவரே 10
கரும்பாகிய வில்லையும், புஷ்பங்களாலே செய்யப்பட்ட அம்புகளையும் உடையவனான மன்மதனின் ஒன்றுக்கொன்று ஒப்பான அடிகளை வணங்கி,
வடமதுரையில் வில் விழவு நடக்கும் அரங்கின் வாசலில் இருந்த ஒப்பற்ற குவலயாபீடம் என்னும் யானை அலறும்படி அதன் கொம்பை முறித்து,
கொக்கு வடிவில் வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்து போட்டவனாய்,
நீல ரத்னம் போன்ற வடிவழகை உடையவனான கண்ணன் எம்பெருமானுடன் என்னைச் சேர்த்துவிட வேண்டும் என்று மலைகள் போன்ற மாளிகைகள் நிறைந்து தோன்றும்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளார்க்குத் தலைவரான பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாளுடைய (என்னுடைய) விருப்பத்தின் பேரில்
பிறந்த இனிய தமிழ்ப்பாமாலையைப் பாடவல்லவர்கள் நித்யஸூரிகள் நாயகனான ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகளை அடைவார்கள்.
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment