24 July 2025

5. பரமஸ்வாமி ( திருமாலிருஞ்சோலை) மற்றும் கள்ளழகர் திருக்கோலத்தில் ...

ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1.முதல் நாள் - சேது பந்தம்

2.இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

3.மூன்றாம் திருநாள் --

மூலவர் - கண்ணன் ( வஸ்திராபஹரணம்)

உற்சவர் - காளிங்க நர்த்தன கண்ணன்

4.நான்காம் திருநாள் -

மூலவர் - புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்)

உற்சவர் - கஜேந்திர மோக்ஷம்,  

5.ஐந்தாம் திருநாள்

மூலவர் - பரமஸ்வாமி ( திருமாலிருஞ்சோலை)

உற்சவர் - கள்ளழகர்






























நாச்சியார் திருமொழி

1.தையொரு திங்கள் 

கண்ணைப் பெற காமதேவனைத் தொழுதல்  

ஐந்தாம் பாசுரம்--  இதில் எம்பெருமான் ஒருவனைத் தவிர வேறு ஒருவனுடன் தன்னை இணைத்துப் பேசினால் தான் உயிர் வாழ மாட்டேன் என்கிறாள்.


வானிடை வாழும் அவ் வானவர்க்கு 

மறையவர் வேள்வியில் வகுத்த அவி

கானிடைத் திரிவதோர் நரி புகுந்து 

கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப

ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று

 உன்னித்து எழுந்த என் தடமுலைகள்

மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் 

வாழகில்லேன் கண்டாய், மன்மதனே!  5


மன்மதனே! ஸ்வர்கத்தில் வாழும் உயர்ந்தவர்களான தேவர்களுக்காக, வேதம் அறிந்த இங்குள்ள ப்ராஹ்மணர்கள் தங்கள் வேள்வியில் ஸமர்ப்பிக்க உண்டாக்கிய ஹவிஸ்ஸை, காட்டிலே திரியும் ஒரு நரியானது புகுந்து அத்தை எடுத்துக் கொள்வதும் முகர்ந்து பார்ப்பதும் செய்வதுபோலே, தன்னுடைய திருமேனியிலே, அதாவது திருக்கைகளிலே திருவாழியையும் திருச்சங்கையும் உடைய புருஷோத்தமனான எம்பெருமானுக்காக கிளர்ந்தெழுந்த என்னுடைய பெருத்த முலைகள் மனுஷ்யர்களுக்கு என்கிற பேச்சு நாட்டில் உண்டானால் நான் உயிர் வாழமாட்டேன்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗


No comments:

Post a Comment