26 July 2025

7.அரங்கன் திருக்கோலத்தில் ஶ்ரீ ஆண்டாள்

  ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1.முதல் நாள் - சேது பந்தம்

2.இரண்டாம்  திருநாள் - ருக்மணி கல்யாணம்

3.மூன்றாம் திருநாள் -- கண்ணன் ( வஸ்திராபஹரணம்) திருக்கோலம் 

4. நான்காம் திருநாள் -- புள்ளின் வாய்க்கிண்டான் ( பகாசுரவதம்) திருக்கோலத்தில் ...-  

5.ஐந்தாம் திருநாள் பரமஸ்வாமி  ( திருமாலிருஞ்சோலை) மற்றும்  கள்ளழகர் திருக்கோலத்தில் ...

6. ஆறாம் திருநாள் ---ஶ்ரீஆண்டாள் கேசவ நம்பியின் கால் பிடித்தல்

7.ஏழாம் திருநாள் -- 

மூலவர் - அரங்கன் திருக்கோலத்தில் 

உற்சவர் -  ஶ்ரீஆண்டாள் 

















நாச்சியார் திருமொழி

1.தையொரு திங்கள் 

கண்ணைப் பெற காமதேவனைத் தொழுதல்  

ஏழாம் பாசுரம் -- இதில் த்ரிவிக்ரமன் எம்பெருமான் என்னைத் தன் கைகளால் தீண்டும்படி நீ செய்ய வேண்டும் என்கிறாள். எம்பெருமானுக்கே தன்னுடைய பக்தி இருக்கும் என்பதை விளக்குகிறாள்.


510

காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து

 கட்டி அரிசி அவல் அமைத்து

வாய் உடை மறையவர் மந்திரத்தால்

 மன்மதனே! உன்னை வணங்குகின்றேன்

தேசம்  முன் அளந்தவன் திரிவிக்கிரமன்

 திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்

சாய் உடை வயிறும் என் தட முலையும்

 தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே 7


மன்மதனே! பசுங்காய் நெல் மற்றும் கரும்பைப் படைத்து அதற்குமேலே கருப்பங்கட்டி, அரிசி, அவல் ஆகியவற்றைச் சமைத்து, நல்ல ஸ்வரத்தை உடையவர்களாய் காம சாஸ்த்ரத்தில் நிபுணர்களானவர்களுடைய மந்த்ரத்தாலே நீ என் பிள்ளையாக இருந்தாலும் உன்னை வணங்குகின்றேன். 

மஹாபலியாலே இந்த லோகங்கள் அபஹரிக்கப்பட்ட காலத்திலே எல்லா லோகங்களையும் திருவடியால் அளந்துகொண்ட த்ரிவிக்ரமன் எம்பெருமான், அவனுடைய திருக்கைகளாலே என்னைத் தீண்டும்படிப் பண்ணி, என்னுடைய ஒளி படைத்த வயிறும், ம்ருதுவான பருத்த முலைகளும் இவ்வுலகிலே நிலைநின்ற புகழைப் பெறும்படி செய்ய வேண்டும்.



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗


No comments:

Post a Comment