26 July 2025

4. ஶ்ரீ ஆண்டாள் கனக தண்டியல் வாகனத்தில்..

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

2.ஸ்ரீ ஆண்டாள் தங்கபரங்கி நாற்காலி வாகனத்திலும்,  சேஷ வாகனத்திலும்

3.ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர  ப்ரம்மோத்ஸவம் -  ஐந்து கருட சேவை 

 4.ஆறாம்  நாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் கனகதண்டியல் வாகனத்திலும்  ரெங்கமன்னார் யானை வாகனத்திலும் திரு வீதி உலா



















நாச்சியார் திருமொழி

2. நாமமாயிரம் 

சிற்றில் சிதைக்க வேண்டாம் என வேண்டுதல் 

நான்காம் பாசுரம்--- உன் முகம் என்னும் மாய மந்த்ரத்தை வைத்து எங்களை மயக்கி எங்கள் சிற்றிலை அழிக்காதே என்கிறார்கள்.


517

பெய்யு மா முகில் போல் வண்ணா! உன்தன் 

பேச்சும் செய்கையும் எங்களை

மையல் ஏற்றி  மயக்க உன் முகம் 

மாய மந்திரம் தான் கொலோ?

நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை 

நோவ நாங்கள் உரைக்கிலோம்

செய்ய தாமரைக் கண்ணினாய்! எங்கள்

 சிற்றில் வந்து சிதையேலே 4


மழையாகப் பெய்து கொண்டிருக்கும் கரிய மேகம் போன்ற திருநிறத்தை உடையவனே! உன் தாழ்ந்த பேச்சுக்களும் செயல்களும் எங்களை பிச்சேற்றிக் கலங்கச்செய்வதற்கு உன்னுடைய திருமுகம் சொக்குப்பொடியோ? செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களை உடையவனே! “இவர்கள் தாழ்ந்தவர்கள், இளம் பிள்ளைகள்” என்று பிறர் சொல்லுவதற்கு பயந்து, நீ வருந்தும்படி நாங்கள் வார்த்தை சொல்லாமல் இருக்கிறோம். எங்கள் சிற்றில்களை வந்து அழிக்காதே.



ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗


No comments:

Post a Comment